Homeசெய்திகள்சினிமா'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா?......அதிர வைக்கும் அப்டேட்!

‘ஜெயிலர் 2’ படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா?……அதிர வைக்கும் அப்டேட்!

-

- Advertisement -

ஜெயிலர் 2 படம் குறித்த லேட்டஸ்ட் தகவல் வெளியாகியுள்ளது.'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா?......அதிர வைக்கும் அப்டேட்!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 2023 ஆம் ஆண்டு ஜெயிலர் திரைப்படம் வெளியானது. இந்தப் படத்தை கோலமாவு கோகிலா, டாக்டர், பீஸ்ட் ஆகிய படங்களை இயக்கிய நெல்சன் திலீப் குமார் இயக்கியிருந்தார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இந்த படத்தை தயாரித்திருந்த நிலையில் அனிருத் இதற்கு இசையமைத்திருந்தார். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப் பெரிய வரவேற்பை பற்றி பிரம்மாண்ட வெற்றி பெற்றது. அடுத்ததாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் ரஜினி, நெல்சன், அனிருத் ஆகியோரின் கூட்டணியில் உருவாகும் ஜெயிலர் 2 படம் தொடர்பான அறிவிப்பு ப்ரோமோ சமீபத்தில் வெளியாகி இணையத்தில் செம வைரலானது. அதே சமயம் இந்த படத்தில் ரஜினியுடன் இணைந்து யார் யார் நடிக்கப் போகிறார்கள்? என்ற எதிர்பார்ப்பும் ரசிகர்கள் மத்தியில் இருந்து வருகிறது. இருப்பினும் சமீப காலமாக ஜெயிலர் 2 படத்தில் மோகன் லால், சிவராஜ்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கப் போகிறார்கள் எனவும் சொல்லப்பட்டு வருகிறது.'ஜெயிலர் 2' படத்தில் நடிக்கும் எஸ்.ஜே. சூர்யா?......அதிர வைக்கும் அப்டேட்! இந்நிலையில் தற்போது கிடைத்த தகவல் என்னவென்றால், ஜெயிலர் 2 படத்தில் எஸ்.ஜே. சூர்யா அல்லது செம்பன் வினோத் ஜோஸ் ஆகிய இருவரில் யாரேனும் ஒருவர் மெயின் வில்லனாக நடிக்க வாய்ப்பிருப்பதாக லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. எனவே ஜெயிலர் முதல் பாகத்தை விட இரண்டாம் பாகத்தில் வில்லன் கதாபாத்திரம் கண்டிப்பாக இன்னும் வலுவானதாகவும் எதிர்பார்ப்பை அதிகப்படுத்தும் விதமாகவும் இருக்கும் என நம்பப்படுகிறது. அத்துடன் இப்படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ