Homeசெய்திகள்சினிமாபொங்கலுக்கு வெளியாகிறதா 'SK 23' படத்தின் டைட்டில் டீசர்?

பொங்கலுக்கு வெளியாகிறதா ‘SK 23’ படத்தின் டைட்டில் டீசர்?

-

சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நடிகராக வலம் வருகிறார். அந்த வகையில் தன்னுடைய அடுத்தடுத்த படங்களை மிகக் கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார் நடிகர் சிவகார்த்திகேயன். பொங்கலுக்கு வெளியாகிறதா 'SK 23' படத்தின் டைட்டில் டீசர்?ஏற்கனவே இவரது நடிப்பில் அமரன் திரைப்படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா , சிபி சக்கரவர்த்தி ஆகியோரின் இயக்கத்தில் தனது அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகியிருக்கிறார் சிவகார்த்திகேயன். இதற்கிடையில் இவர், பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமானார். பொங்கலுக்கு வெளியாகிறதா 'SK 23' படத்தின் டைட்டில் டீசர்?அதன்படி ஸ்ரீ லட்சுமி மூவிஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்புகளும் ஏற்கனவே தொடங்கப்பட்டு தூத்துக்குடி, சென்னை போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. கிட்டத்தட்ட 90 சதவீத படப்பிடிப்புகள் நிறைவடைந்ததாகவும் இன்னும் 8 முதல் 10 நாட்கள் படப்பிடிப்புகள் மட்டுமே மீதம் இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் இந்த படத்திற்கு பாஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஜனவரி மாதம் புத்தாண்டு தினத்தை முன்னிட்டு வெளியாகும் என ஏற்கனவே சமூக வலைதளங்களில் செய்திகள் வெளியானது. இறுதிக்கட்ட படப்பிடிப்பில் சிவகார்த்திகேயன்- ஏ.ஆர். முருகதாஸ் கூட்டணியின் 'SK 23'!ஆனால் தற்போது கிடைத்த தகவலின் படி, 2025 பொங்கல் தின ஸ்பெஷலாக இந்த படத்தில் இருந்து டைட்டில் டீசர் வெளியாகும் என புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இந்த தகவல் ரசிகர்களுக்கு உற்சாகத்தை தந்துள்ளது. மேலும் தற்காலிகமாக SK 23 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் சிவகார்த்திகேயனுடன் இணைந்து ருக்மினி வசந்த், விக்ராந்த், வித்யூத் ஜம்வால், டான்சிங் ரோஸ் சபீர், பிஜு மேனன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். இந்த படத்திற்கு அனிருத் இசை அமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ