SK 25 படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடந்த தீபாவளி தினத்தன்று அமரன் திரைப்படம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வருகிறார் சிவகார்த்திகேயன். மேலும் இவர், சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். அதன்படி இந்த படத்திற்கு தற்காலிகமாக SK 25 என்று தலைப்பு வைக்கப்பட்டிருக்கிறது. இந்த படத்தினை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசையமைக்கிறார். ரவி கே சந்திரன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார். இந்த படமானது கடந்த 1965 ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க அவருடன் இணைந்து அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். நடிகர் ஜெயம் ரவி, இந்த படத்தில் வில்லனாக நடிக்கிறார்.
#SK25 🔥🔥🔥🥁🥁🥁🥁
Thank you @Siva_Kartikeyan anna for this ♥️♥️♥️♥️@Sudha_Kongara mam@actor_jayamravi sir @Atharvaamurali sir @gvprakash sir @dop007 sir @sreeleela14 @RedGiantMovies_ @DawnPicturesOff pic.twitter.com/LSjwdOnpLp— Aakash baskaran (@AakashBaskaran) December 14, 2024
இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருக்கும் நிலையில் இன்று (டிசம்பர் 14) இந்த படத்தின் பூஜை நடைபெற்றுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பை படத்தின் தயாரிப்பு நிறுவனம் தனது சமூக வலைதள பக்கத்தில் வெளியிட்டுள்ளது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகளும் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.