SK 25 படத்தின் படப்பிடிப்பு நாளை தொடங்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
சிவகார்த்திகேயன் நடிப்பில் கடைசியாக அமரன் எனும் திரைப்படம் வெளியாகி கிட்டத்தட்ட 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. அதைத்தொடர்ந்து நடிகர் சிவகார்த்திகேயன், ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது படத்தில் நடித்து வருகிறார். மேலும் சிவகார்த்திகேயன், சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க போவதாகவும் இதற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கப் போவதாகவும் சொல்லப்படுகிறது. மேலும் சிவகார்த்திகேயனின் 25 வது படமாக உருவாகும் இந்த படத்தில் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீ லீலா ஆகியோர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து நடிக்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இருப்பினும் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் இதுவரை வெளியாகவில்லை. அடுத்தது இந்த படமானது சூர்யா நடிப்பில் உருவாக இருந்த புறநானூறு திரைப்படம் என்பது குறிப்பிடத்தக்கது. எனவே SK 25 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படமானது இந்தி திணிப்பை மையமாக வைத்து உருவாக்கப்பட உள்ளது. அதன்படி இப்படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்க உள்ளார். இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வரும் நிலையில் இதன் படப்பிடிப்பு நாளை (டிசம்பர் 14) சென்னையில் தொடங்க இருப்பதாக புதிய தகவல் வெளிவந்துள்ளது. ஆகையினால் நாளை இந்த படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகுமா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்.