Homeசெய்திகள்சினிமா70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'SK23'..... பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா?

70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் ‘SK23’….. பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா?

-

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது அமரன் திரைப்படத்தில் நடித்து வருகிறார். மிகுந்த எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் திரைப்படம் உருவாகி வருகிறது. அதேசமயம் சிவகார்த்திகேயன் SK23 படத்தில் நடித்து வருகிறார்.70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'SK23'..... பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா? ஏ ஆர் முருகதாஸ் இயக்கி வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். படத்தில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக ருக்மினி வசந்த் நடிக்க வில்லனாக வித்யூத் ஜம்வால் நடிக்கிறார். சமீபத்தில் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அந்த வகையில் இப்படம் முழு நீள ஆக்சன் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் SK23 படத்தின் பட்ஜெட் சம்பந்தமான அப்டேட் கிடைத்துள்ளது. அதன்படி இப்படம் 70 கோடி ரூபாய் பட்ஜெட்டில் தயாராகி வருவதாக தகவல் கிடைத்துள்ளது. 70 கோடி பட்ஜெட்டில் உருவாகும் 'SK23'..... பிரபலங்களுக்கு மட்டுமே இவ்வளவு சம்பளமா?ஆனால் படத்தில் ஹீரோவாக நடிக்கும் சிவகார்த்திகேயன் ரூ. 30 கோடி சம்பளம் வாங்குகிறாராம். அது போல ஏ ஆர் முருகதாஸுக்கு ரூ. 20 கோடியும் அனிருத்திற்கு ரூ. 7 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளதாம். இந்நிலையில் மீதம் இருக்கும் 13 கோடியில் மற்ற படக்குழுவினருக்கு கொடுக்க வேண்டும். இவ்வளவு குறைந்த பட்ஜெட்டில் படத்தை எப்படி எடுக்கப் போகிறார்கள். எனவே படத்தின் தரம் நன்றாக இருக்குமா என்று பலரும் தங்களின் கேள்விகளை எழுப்பி வருகிறார்கள்.

MUST READ