நடிகை சினேகா தமிழ் சினிமாவில் மட்டுமல்லாமல் தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். அந்த வகையில் தமிழில் இவர் என்னவளே, ஆனந்தம், உன்னை நினைத்து, பார்த்திபன் கனவு, ஆட்டோகிராப் ஆகிய படங்களில் நடித்து பெயரையும் புகழையும் பெற்றார். இதற்கிடையில் இவர் நடிகர் பிரசன்னாவை காதலித்து திருமணம் செய்து கொண்டார். இருவரும் அச்சமுண்டு அச்சமுண்டு திரைப்படத்தில் இணைந்து நடித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. திருமணத்திற்கு பிறகும் தொடர்ந்து தனுஷ், விஜய் என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து பணியாற்றி வருகிறார். மேலும் நடிகை சினேகா சமூக வலைதளங்களிலும் ஆக்டிவாக இருக்கக்கூடியவர். இந்த நிலையில் இவர், பங்குனி மாத தேய்பிறை பிரதோஷத்தை ஒட்டி திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலில் நேற்று (மார்ச் 27) இரவு தனது கணவருடன் இணைந்து கிரிவலம் மேற்கொண்டார்.
அப்போது சினேகாவையும், பிரசன்னாவையும் கண்ட ரசிகர்கள் ஓடோடி வந்து அவர்களுடன் இணைந்து செல்ஃபி எடுத்துக் கொண்டனர். அப்போது சினேகா ரசிகர்களிடம் மிகவும் எளிமையாக நடந்து கொண்டார். திருநங்கைகளுடனும் பிரண்ட்லியாக போட்டோ எடுத்துக் கொண்டார் சினேகா. அவர்களும் சினேகாவை அக்கா அக்கா என்ற சொல்லி தங்களின் அன்பை வெளிப்படுத்தினர். இது தொடர்பான வீடியோவும் புகைப்படங்களும் இணையத்தின் வைரலாகி வருகிறது.
- Advertisement -