அனைவருக்கும் பதில் சொல்ல வேண்டிய அவசியமில்லை – ஷோபிதா
பாலிவுட்டில் முன்னணி நடிகையாக வலம் வருபவர் ஷோபிதா துலிபாலா. இவர் 2016- ம் ஆண்டு வெளியான ராமன் ராகவ் படத்தில் நடித்து திரை உலகில் அறிமுகமானார். அடுத்தடுத்து அவர் பல திரைப்படங்களில் நடித்திருந்தாலும், துல்கர் சல்மான் நடித்த குரூப்படத்தில் நடித்ததன் மூலம் தான் ஷோபிதா பிரபலம் அடைந்தார். இதைத் தொடர்ந்து மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் திரைப்படத்தில் வானதி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தார்.
இதையடுத்து, பாலிவுட்டில் மேஜர் என்ற வெப் தொடரில் நடித்தார். இதில், அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடித்திருந்தனர். இதனிடையே, நடிகர் நாக சைதன்யாவுக்கும், இவருக்கும் இடையே காதல் இருப்பதாக தகவல் வெளியானது. நடிகர் நாக சைதன்யாவும், நடிகை சமந்தாவும், கடந்த 2017-ம் ஆண்டு காதல் திருமணம் செய்து கொண்டனர். தென்னிந்திய சினிமாவின் நட்சத்திர தம்பதிகளாக திகழ்ந்த இருவரும் திடீரென கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 2021-ம் ஆண்டு பிரிந்தனர். இதைத் தொடர்ந்து நாக சைதன்யாவும், ஷோபிதாகவும் காதல் செய்வதாக கூறப்பட்டது.
இது தொடர்பாக நிகழ்ச்சி ஒன்றில் ஷோபிதாவிடம் எழுப்பப்பட்ட கேள்விக்கு அவர் காரமாக பதில் அளித்துள்ளார். உண்மை என்னவென்று தெரியாமல் பேசும் எவரும் பதில் அளிக்கும் அவசியம் எனக்கு இல்லை. நான் எந்த தவறும் செய்யாதபோது, அதைப் பற்றி விளக்கத்தை நான் ஏன் கொடுக்க வேண்டும். எப்போதும் அரைகுறை அறிவுடன் எழுதுவதாகவும் அவர் கடுமையாக பேசினார்.