தமிழில் பொன்னியின் செல்வன் படத்தின் மூலம் வானதியாக அனைவரின் மனதையும் கவர்ந்தவர் சோபிதா துலிபாலா. இவர் தமிழுக்கு புதிது என்றாலும், பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக வலம் வருகிறார். கடந்த 2016-ம் ஆண்டு திரைக்கு வநந்த ராமன் ராகவ் படத்தில் நாயகியாக நடித்ததன் மூலம் இவர் திரையுலகிற்கு அறிமுகமானார். இத்திரைப்படத்தின் மூலம் இவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. இவர் இரண்டாவதாக மலையாளத்தில் நடித்தார். துல்கர் சல்மான் தயாரித்து நடித்த குரூப் படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்திருப்பார்.
இப்படத்திற்கு பிறகு நேரடியாக தமிழில் அவருக்கு வாய்ப்பு வந்தது. மணிரத்னம் இயக்கிய பொன்னியின் செல்வன் படத்தில் ஜெயம்ரவிக்கு ஜோடியாக வானதி என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்திருந்தார். மேலும், தெலுங்கு, இந்தி எனஅடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். பொன்னியின் செல்வன் இரண்டாம் பாகத்திலும் அவர் நடித்திருந்தார். இதையடுத்து, பாலிவுட்டில் வெப் தொடரில் நடித்தார். இதில், அனில் கபூர் மற்றும் ஆதித்யா ராய் கபூர் ஆகியோரும் நடித்திருந்தனர்.
இதைத் தொடர்ந்து, மன்கிமேன் என்ற ஹாலிவுட் படத்தில் அவர் நடித்து வருகிறார். இதில், பாலியல் தொழிலாளியாக அவர் நடித்திருக்கிறாராம். இதற்காக அவர்களை பற்றி அறிய ரெட் லைட் பகுதிக்கு நேரடியாக சென்று, அவர்களின் கஷ்டங்களை கேட்டறிந்து அவர் நடித்துள்ளாராம். அவர்களின் வலியை திரைக்கு கொண்டுவர கிடைத்த வாய்ப்பு இது என சோபிதா தெரிவித்துள்ளார். இத்திரைப்படம் விரைவில் திரைக்கு வரும் என்றும்படக்குழு தெரிவித்துள்ளது