Homeசெய்திகள்சினிமாஎன்னமா இப்படி பண்ணீட்டிங்க...? தூக்கில் தொங்கி துயரத்தில் ஆழ்த்திய சிம்ரன்..!

என்னமா இப்படி பண்ணீட்டிங்க…? தூக்கில் தொங்கி துயரத்தில் ஆழ்த்திய சிம்ரன்..!

-

- Advertisement -

சமூக வலைதளங்களில் மிகவும் பிரம்பலமான ஆர்.ஜே.சிம்ரன் சிங் தற்கொலை குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

ரேடியோ வர்னணையாளரான சிம்ரன் சிங் வீட்டில் தூக்கில் தொங்கிய நிலையில் சடலம் கண்டெடுக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சிம்ரனுக்கு 25 வயது. குருகிராமில் உள்ள செக்டார் 47ல் உள்ள வாடகை குடியிருப்பில் அவரது உடல் கண்டெடுக்கப்பட்டது. சிம்ரனின் மரணம் தற்கொலை என காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவரது உடலை மீடு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட போது மருத்துவர்கள் அவர் இறந்துவிட்டதாக தெரிவித்தனர். சிம்ரனின் உடல் பிரேத பரிசோதனைக்கு அனுப்பப்பட்டு குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சிம்ரன் இறந்த தகவல் தெரிந்து அவரது ரசிகர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். எவர் ஏன் தற்கொலைக்கு முயன்றார் என்பது குறித்து எந்தத் தகவலும் கிடைக்கவில்லை.

போலீஸாரின் முதற்கட்ட விசாரணையில் இது தற்கொலை எனத் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து போலீசார் பல வகைகளிலும் விசாரணை நடத்தி வருகின்றனர். தினமும் பதிவிடும் சிம்ரனின் இன்ஸ்டாகிராம் கணக்கில் கடைசியாக ஒரு வாரத்திற்கு முன்பு மட்டுமே வீடியோ பகிர்ந்து இருந்தார். அவரது மரணச் செய்தியை அடுத்து, அவரது பதிவின் கீழ் ரசிகர்கள் தொடர்ந்து கமெண்ட் செய்து வருகின்றனர்.

இதுகுறித்து காவல்துறை தரப்பில், ‘‘சிம்ரனின் பெற்றோர்கள் தங்களது மகள் நீண்ட நாட்களாக பிரச்னையில் இருந்தார். அதனால் இந்த முடிவை எடுத்திருக்கலாம்’’ எனத் தெரிவித்துள்ளனர். நேற்று இரவு 10.30 மணிக்கு மருத்துவமனையில் இருந்து போலீஸாருக்கு போன் வந்தது. அதன் பிறகு போலீசார் மருத்துவமனைக்கு வந்து பிரேத பரிசோதனைக்கு பிறகு சிம்ரனின் உடல் அவரது குடும்ப உறுப்பினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

சிம்ரன் யூடியூப் சேனலையும் நடத்தி வருகிறார். இன்ஸ்டாகிராமில் 683 லட்சம் ஃபாலோயர்ஸையும் வைத்துள்ளார்.

MUST READ