Homeசெய்திகள்சினிமாதெலுங்கில் ரீரிலீஸ் ஆகும் '7ஜி ரெயின்போ காலனி'... உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ள சோனியா அகர்வால்!

தெலுங்கில் ரீரிலீஸ் ஆகும் ‘7ஜி ரெயின்போ காலனி’… உற்சாகத்தை வெளிப்படுத்தியுள்ள சோனியா அகர்வால்!

-

- Advertisement -

7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தெலுங்கில் மீண்டும்ரீ  ரீரிலீஸ் செய்யப்படுவதை அடுத்து நடிகை சோனியா அகர்வால் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். 

செல்வராகவன் இயக்கத்தில் கிருஷ்ணா, சோனியா அகர்வால் நடிப்பில் செல்வராகவன் இயக்கத்தில் வெளியான 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் அப்போது நல்ல வரவேற்பைப் பெற்றது.

மற்ற படங்களில் காண்பிக்கப்படும் காதல் போல காவியமாக இல்லாமல் நாம் அன்றாடம் பார்க்கும் நம்முடைய தெருக்களில், பக்கத்து வீடுகளில் நடந்த ஒரு காதல் கதை போலவே நம்முடன் மிகவும் இணக்கமாக ஒட்டி இருந்தது இந்த கதை.

படத்தின் கதாநாயகன் தன்னுடைய அப்பாவிடம் அடி வாங்கும்காட்சிகள், கதாநாயகியிடம் ஆர்ப்பாட்டம் இல்லாமல் தன் காதலை வெளிப்படுத்தும் விதங்கள் யாவும் நமக்கு மிக நெருக்கமாக அமைந்திருந்தது. அதுதான் இந்தப் படத்தின் வெற்றிக்குக் காரணம். 

இன்றளவும் இந்தப் படம் ரசிகர்களால் கொண்டாடப்பட்டு வருகிறது. நா முத்துக் குமார் வரிகளில் யுவன் இசையில் உருவான அனைத்து பாடல்களும் இன்றளவும் அனைவரின் பிளே லிஸ்டுகளையும் ஆட்சி செய்து கொண்டிருக்கிறது. 

படத்தின் ஒவ்வொரு வசனங்களையும் கூர்மையாக எழுதியிருந்தார் செல்வராகவன். இந்தப் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக இருப்பதாக தற்போது அப்டேட்கள் வந்து கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் 7ஜி ரெயின்போ காலனி திரைப்படம் தெலுங்கில் ‘7ஜி  பிருந்தாவன் காலனி’ என்ற பெயரில் வெளியானது. தற்போது இந்தப் படம் தெலுங்கில் ரீரிலீஸ் ஆக இருக்கிறது.

“என்னுடைய ஆல் டைம் ஃபேவரட்டான பிருந்தாவன் காலனி திரைப்படம் மீண்டும் திரையரங்குகளில் வருவதை எண்ணி எனக்கு மிகவும் மகிழ்ச்சியாகவும் ஆச்சரியமாகவும் இருக்கிறது. இந்தக் காவிய காதல் கதை மீண்டும் ஒருமுறை திரையரங்குகளில் உங்களுக்கு விருந்தளிக்க இருக்கிறது. 19 வருடங்கள் ஆனாலும் இந்த படத்தில் பணியாற்றிய அனைவரும் தற்போதும் இந்தப் படம் குறித்து என்னைப் போலவே  உற்சாகமாக இருப்பார்கள் என்று நினைக்கிறேன். உங்களுடைய நண்பர்கள் மற்றும் குடும்பத்தினர் உடன்  மீண்டும் செப்டம்பர் 22ஆம் தேதி இந்த படத்தை திரையரங்கில் சென்று பாருங்கள்” என்று சோனியா அகர்வால் தெரிவித்துள்ளார்

MUST READ