Homeசெய்திகள்சினிமா'சூது கவ்வும் 2' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு!

‘சூது கவ்வும் 2’ படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு!

-

- Advertisement -

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியிருந்த படம் தான் சூது கவ்வும். அசோக் செல்வன், பாபி சிம்ஹா, கருணாகரன், சஞ்சிதா ஷெட்டி ஆகியோர் நடித்திருந்த இந்த படம் 2013 இல் வெளியாகி ஏகோபித்த வரவேற்பை பெற்றது. படத்தின் பின்னணி இசை பெரும் பலமாக அமைந்திருந்தது. 'சூது கவ்வும் 2' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு!டார்க் காமெடி கதை களத்தில் உருவாகியிருந்த இந்த படம் இன்று வரையிலும் பலரின் பேவரைட் படமாக இருக்கிறது. இந்நிலையில் நீண்ட இடைவெளிக்கு பிறகு சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கியுள்ளது. இந்த படத்தில் மிர்ச்சி சிவா கதாநாயகனாக நடிக்க படத்தை எஸ்.ஜே அர்ஜுன் இயக்கியுள்ளார். இந்த படத்தின்  சூது கவ்வும் 2 என்ற தலைப்புடன் நாடும் நாட்டு மக்களும் என்ற டேக் லைன் இடம்பெற்றுள்ளது. மேலும் இந்த படத்தில் கருணாகரன், ரமேஷ் திலக், ராதாரவி, எம் எஸ் பாஸ்கர் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக், அதைத் தொடர்ந்து டீசரும் வெளியாகி ரசிகர்களின் கவனத்தை ஈர்த்தது. 'சூது கவ்வும் 2' படத்தின் முதல் பாடல் ரிலீஸ் அறிவிப்பு!இந்நிலையில் இந்த படத்தின் WE ARE NOT THE SAME எனும் முதல் பாடல் நாளை மார்ச் 29ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த படத்துக்கு கார்த்திக் K தில்லை ஒளிப்பதிவு செய்துள்ளார். எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைத்துள்ளார். தங்கம் சினிமாஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கோடை விடுமுறையில் வெளியிட பட குழுவினர் திட்டமிட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ