Homeசெய்திகள்சினிமாஇணையத்தை கலக்கும் 'சூது கவ்வும் 2' பட ட்ரெய்லர்!

இணையத்தை கலக்கும் ‘சூது கவ்வும் 2’ பட ட்ரெய்லர்!

-

சூது கவ்வும் 2 படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது.இணையத்தை கலக்கும் 'சூது கவ்வும் 2' பட ட்ரெய்லர்!

விஜய் சேதுபதி நடிப்பில் நலன் குமாரசாமி இயக்கியிருந்த படம் தான் சூது கவ்வும். டார்க் காமெடி ஜானரில் வெளியான இந்த படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து தற்போது சூது கவ்வும் படத்தின் இரண்டாம் பாகம் மிர்ச்சி சிவா நடிப்பில் உருவாகி இருக்கிறது. சூது கவ்வும் 2 – நாடும் நாட்டு மக்களும் என்ற தலைப்பில் உருவாக்கப்பட்டிருக்கும் இந்த படத்தில் மிர்ச்சி சிவா உடன் இணைந்து ஹரிஷா, ராதாரவி, எம்.எஸ். பாஸ்கர், கருணாகரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருக்கின்றனர். இந்த படத்தினை தங்கம் சினிமாஸ் நிறுவனமும் திருக்குமரன் என்டர்டெயின்மெண்ட் நிறுவனமும் இணைந்து தயாரித்திருக்கிறது. இந்த படத்திற்கு எட்வின் லூயிஸ் விஸ்வநாத் இசையமைக்க கார்த்திக் கே தில்லை ஒளிப்பதிவு பணிகளை கவனித்துள்ளார். சூது கவ்வும் முதல் பாகத்தை போல் இந்த படமும் காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி இருக்கிறது.

வருகின்ற டிசம்பர் 13ஆம் தேதி இந்த படம் திரைக்கு வர இருக்கும் நிலையில் படத்திலிருந்து டீசர், பாடல்கள் என அடுத்தடுத்து வெளியாகி ரசிகர்களின் கவனம் ஈர்த்துள்ளது. இந்நிலையில் இந்த படத்தின் டிரைலரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த ட்ரெய்லர் தற்போது இணையத்தில் செம வைரலாகி வருகிறது.

எனவே இந்த படம் விஜய் சேதுபதியின் சூது கவ்வும் படத்தை போல் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ