Homeசெய்திகள்சினிமாசூரரைப் போற்று இந்தி ரீமேக்...... சுதா கொங்கரா, அக்ஷய் குமார் கூட்டணியின் புதிய படம்..... ரிலீஸ்...

சூரரைப் போற்று இந்தி ரீமேக்…… சுதா கொங்கரா, அக்ஷய் குமார் கூட்டணியின் புதிய படம்….. ரிலீஸ் எப்போது?

-

- Advertisement -

சூரரைப் போற்று இந்தி ரீமேக்...... சுதா கொங்கரா, அக்ஷய் குமார் கூட்டணியின் புதிய படம்..... ரிலீஸ் எப்போது?கடந்த 2020 ஆம் ஆண்டு சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்து வெளியான படம் சூரரைப் போற்று. இந்தப் படத்தில் சூர்யாவுடன் இணைந்து அபர்ணா பாலமுரளி, ஊர்வசி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இந்த படம் நேரடியாக அமேசான் ப்ரைம் ஓடிடி தளத்தில் வெளியான நிலையிலும் ரசிகர்களின் பேராதரவை பெற்று பல தேசிய விருதுகளை அள்ளியது. அதைத் தொடர்ந்து சுதா கொங்கரா இந்த படத்தை இந்தியில் ரீமேக் செய்து வருகிறார். அதன்படி இந்தி ரீமேக்கான சூரரைப் போற்று படத்தில் நடிகர் அக்ஷய் குமார் நடிக்கிறார்.சூரரைப் போற்று இந்தி ரீமேக்...... சுதா கொங்கரா, அக்ஷய் குமார் கூட்டணியின் புதிய படம்..... ரிலீஸ் எப்போது? இந்த படத்தில் அக்ஷய் குமார் உடன் இணைந்து ராதிகா மதன், பரேஷ் ராவல் உள்ளிட்ட பலரும் நடிக்கின்றனர். இந்தப் படத்தை சூர்யாவின் 2D என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரிக்க ஜிவி பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். மேலும் இந்த படத்தில் நடிகர் சூர்யா கேமியோ ரோலில் நடிக்கிறார். சூரரைப் போற்று இந்தி ரீமேக்...... சுதா கொங்கரா, அக்ஷய் குமார் கூட்டணியின் புதிய படம்..... ரிலீஸ் எப்போது? இந்நிலையில் இந்த படத்தை 2024 ஜூலை 12ஆம் தேதி வெளியிட பட குழுவினர் திட்டமிட்டுள்ளதாக தற்போதைய தகவல்கள் கிடைத்துள்ளது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ஏற்கனவே இந்த படம் 2023 செப்டம்பர் மாதத்தில் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தின் ரிலீஸ் தேதி ஒத்திவைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

MUST READ