Homeசெய்திகள்சினிமாசூரி, விஜய் சேதுபதி கூட்டணியின் 'விடுதலை 2'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

சூரி, விஜய் சேதுபதி கூட்டணியின் ‘விடுதலை 2’…. முதல் பாடல் குறித்த அறிவிப்பு!

-

சூரி, விஜய் சேதுபதி கூட்டணியில் உருவாகும் விடுதலை 2 படத்தின் முதல் பாடல் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.

கடந்த ஆண்டு பிரபல இயக்குனர் வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை பாகம் 1 எனும் திரைப்படம் வெளியானது. சூரி, விஜய் சேதுபதி கூட்டணியின் 'விடுதலை 2'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!இந்த படத்தில் சூரி கதாநாயகனாக நடிக்க விஜய் சேதுபதி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். மேலும் இவர்களுடன் இணைந்து கௌதம் வாசுதேவ் மேனன், சேத்தன், பவானி ஸ்ரீ உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றது. அதைத்தொடர்ந்து வெற்றிமாறன் தற்போது விடுதலை பாகம் 2 எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதில் சூரி, விஜய் சேதுபதி தவிர மஞ்சு வாரியர், அட்டகத்தி தினேஷ் ஆகிய பலரும் நடித்து வருகின்றனர். இந்த படத்தினை வெற்றிமாறனின் கிராஸ் ரூட் நிறுவனம் தயாரிக்க இளையராஜா இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏறத்தாழ நிறைவடைந்த நிலையில் படமானது வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்திலிருந்து அடுத்தடுத்த போஸ்டர்களும் வெளியாகி ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. சூரி, விஜய் சேதுபதி கூட்டணியின் 'விடுதலை 2'.... முதல் பாடல் குறித்த அறிவிப்பு!இந்நிலையில் விடுதலை 2 திரைப்படத்திலிருந்து தினம் தினமும் எனும் முதல் பாடல் வருகின்ற நவம்பர் 17ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) அன்று வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முதல் பாகத்தில் இளையராஜாவின் இசையில் வெளியான பாடல்கள் அனைத்தும் பிரபலமான நிலையில் இரண்டாம் பாகத்தில் உருவாகி இருக்கும் பாடலும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ