Homeசெய்திகள்சினிமாதனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி!

தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி!

-

- Advertisement -

நடிகர் சூரி தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது.தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி!

நடிகர் சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். அந்த வகையில் தற்போது பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். அடுத்தது மதிமாறன் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் சூரி. அதே சமயம் நடிகர் சூரி, வெப் தொடர் ஒன்றில் கதாநாயகனாக நடிக்க உள்ளார் என ஏற்கனவே தகவல் வெளியாகி வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த வெப் தொடரை நடிகர் சூரி தானே தயாரித்து நடிக்க உள்ளாராம். தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி!அதுமட்டுமில்லாமல் இந்த வெப் தொடரானது நடிகர் சூரியின் முத்துச்சாமியின் வாழ்க்கை வரலாற்றை தழுவி உருவாக்கப்பட இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதாவது இதில் நடிகர் சூரி, நாட்டுப்புற கலைஞராக தோன்றுவார் என்றும் சில காட்சிகளில் வயதான தோற்றத்தில் நடிப்பார் என்றும் செய்திகள் வெளியாகி வருகின்றன. அத்துடன் சூரி இந்த வெப் சீரிஸ் தொடர்பாக நெட்பிளிக்ஸ், அமேசான் ஆகிய நிறுவனத்திடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறாராம். தனது அப்பாவின் வாழ்க்கை வரலாற்று கதையில் நடிக்கும் சூரி!மேலும் இந்த வெப் தொடரை இயக்குனர் விக்ரம் சுகுமாரன் இயக்கப் போவதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. அடுத்தது இந்த படத்தில் நடிகை கயல் ஆனந்தி கதாநாயகியாக நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாகவும் நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இனிவரும் நாட்களில் இது தொடர்பான மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ