சூரி பட நடிகர் ஒருவர் சிவகார்த்திகேயனின் பராசக்தி படத்தில் இணைவதாக தகவல் வெளியாகி உள்ளது.
சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் முக்கியமான நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இவரது நடிப்பில் கடந்த ஆண்டு தீபாவளி தினத்தன்று வெளியான அமரன் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன், SK 23, SK 24 ஆகிய படங்களை கைவசம் வைத்திருக்கிறார். அதே சமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் தனது 25வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இந்த படத்திற்கு பராசக்தி என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்திற்கு ஜிவி பிரகாஷ் இசையமைக்கிறார். இந்த படத்தில் சிவகார்த்திகேயனுக்கு வில்லனாக ஜெயம் ரவி நடிக்க இவர்களுடன் இணைந்து அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தில் நடிகர் சிவகார்த்திகேயன் கல்லூரி மாணவனாக நடிக்கிறார். இந்த படம் 1960 காலகட்டத்தில் நடந்த இந்தி திணிப்பு போராட்டத்தை மையமாக வைத்து உருவாக்கப்படுகிறது. சமீபத்தில் இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த போஸ்டர்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்த நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் இந்த படத்தில் நடிகர் உன்னி முகுந்தன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார் என்று அப்டேட் கிடைத்துள்ளது.
நடிகர் உன்னி முகுந்தன் தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான சீடன், சூரி நடிப்பில் வெளியான கருடன் ஆகிய படங்களில் நடித்திருந்தார். அடுத்தது இவரது நடிப்பில் வெளியான மார்கோ திரைப்படம் மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.