Homeசெய்திகள்சினிமாசூரி நடிக்கும் 'மாமன்'.... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

சூரி நடிக்கும் ‘மாமன்’…. நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

-

- Advertisement -

சூரி நடிக்கும் மாமன் திரைப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.சூரி நடிக்கும் 'மாமன்'.... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்!

ஆரம்பத்தில் நகைச்சுவை நடிகராக தமிழ் சினிமாவில் பிரபலமான சூரி தற்போது தொடர்ந்து பல படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அந்த வகையில் இவரது நடிப்பில் வெளியான விடுதலை பாகம் 1, கருடன், கொட்டுக்காளி, விடுதலை பாகம் 2 ஆகிய படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத்தொடர்ந்து நடிகர் சூரி, விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டியராஜ் இயக்கத்தில் மாமன் எனும் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் சூரியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். அதேசமயம் இந்த படத்தில் நடிகை சுவாசிகா சூரியின் சகோதரியாக நடிக்கிறார் என்று சொல்லப்படுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்புகள் கடந்த சில தினங்களுக்கு முன்னர் பூஜையுடன் தொடங்கப்பட்டு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.சூரி நடிக்கும் 'மாமன்'.... நாளை வெளியாகும் ஃபர்ஸ்ட் லுக்! இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் நாளை (ஜனவரி 16) மாலை 6.30 அளவில் வெளியாகும் என படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மேலும் மாமன் திரைப்படத்தினை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க ஹேசம் அப்துல் வாகப் இதற்கு இசை அமைக்கிறார். தினேஷ் புருஷோத்தமன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ