Homeசெய்திகள்சினிமாசூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு!

-

சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியாகியுள்ளது.

நடிகர் சூரி கடந்த 2009 ஆம் ஆண்டு வெளியான வெண்ணிலா கபடி குழு என்ற படத்தில் நடித்ததன் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானார்.சூரி நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் வெளியீடு! இந்த படத்தை தொடர்ந்து இவரை பலரும் பரோட்டா சூரி என்று அழைத்து வந்தனர். இவ்வாறு ஒரு காமெடி நடிகராக தனக்கென தனி அடையாளத்தை உருவாக்கி ஏராளமான ரசிகர்களை சேகரித்து வைத்திருக்கிறார் சூரி. அதேசமயம் இவர் கடந்தாண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான விடுதலை பாகம் 1 திரைப்படத்தின் மூலம் கதாநாயகனாகவும் அறிமுகமானார். இந்த படம் இவருக்கு பெயரையும் புகழையும் பெற்றுத்தர இதைத்தொடர்ந்து அடுத்தடுத்த படங்களில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதன்படி வருகின்ற டிசம்பர் 20ஆம் தேதி இவரது நடிப்பில் உருவாகியிருக்கும் விடுதலை 2 திரைப்படம் திரைக்கு வர தயாராகி வருகிறது. இது ஒரு பக்கம் இருக்க, மற்றொரு பக்கம் நடிகர் சூரி, விலங்கு வெப் தொடரை இயக்கிய பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடித்து வருகிறார். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு ஏற்கனவே வெளியானது.

அதைத்தொடர்ந்து இந்த படத்தில் சூரியுடன் இணைந்து நடிகை ஐஸ்வர்யா லக்ஷ்மி முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருவதாகவும் சொல்லப்பட்டது. இந்நிலையில் இந்த படத்திற்கு மாமன் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.

மேலும் இந்த படம் இன்று (டிசம்பர் 16) பூஜையுடன் தொடங்கப்பட்டுள்ளதாகவும் பூஜை தொடர்பான புகைப்படங்களையும் நடிகர் சூரி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

மாமன் திரைப்படத்தை லார்க் ஸ்டுடியோஸ் நிறுவனம் தயாரிக்க தினேஷ் புருஷோத்தமன் இந்த படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ஹேசம் அப்துல் வாகப் இந்த படத்திற்கு இசையமைக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ