சூரி – சசிகுமார் கூட்டணியில் கருடன்… வெளியானது முதல் தோற்றம்…
விஷ்ணு விஷால் நடித்த வெண்ணிலா கபடிக்குழு படத்தில் பரோட்டா காமெடி மூலம் தமிழ் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் நடிகர் சூரி. இதையடுத்து, அவருக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கின. சூரியின் திரைப்பயணத்தின் ஆரம்பகாலத்தில் பெரும்பாலும் நடிகர் சிவகார்த்திகேயனுடன் இணைந்து அவர் நடித்திருப்பார். வருத்தப்படாத வாலிபர் சங்கம், ரஜினி முருகன், மான் கராத்தே என அவர் சிவகார்த்திகேயனுடன் இணைந்த நடித்த படங்கள் ஏராளம்.
சூரி இறுதியாக வெற்றிமாறன் இயக்கத்தில் விடுதலை திரைப்படத்தில் நடித்திருந்தார். கடந்த ஆண்டு வெளியான விடுதலை திரைப்படம் வரவேற்பை பெற்றது. இதையடுத்து இரண்டாம் பாகம் உருவாகி வருகிறது. இப்படத்தின் மூலம் அவர் ஹீரோவாக அறிமுகமாகினார். தற்போது, சூரி துரை செந்தில் குமார் இயக்கத்தில் நடித்துள்ளார். இப்படத்திற்கு வெற்றிமாறன் திரைக்கதை எழுதி இருக்கிறார். சூரி சசிகுமார், மலையாள பிரபலம் உன்னி முகுந்தன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.
இப்படத்திற்கு கருடன் என்று தலைப்பு வைத்துள்ளனர். யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். இந்நிலையில், படத்தின் முதல் தோற்றம் மற்றும் கிளிம்ப்ஸ் வீடியோ வெளியாகி உள்ளது. இது சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது.