சொர்க்கவாசல் படத்தில் ஓடிடி ரிலீஸ் அப்டேட் வெளியாகியுள்ளது.தமிழ் சினிமாவில் பிரபல இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருபவர் ஆர் ஜே பாலாஜி. அந்த வகையில் இவர் தற்போது சூர்யா 45 எனும் திரைப்படத்தை இயக்கி வருகிறார். இதற்கிடையில் இவரது நடிப்பில் கடந்த நவம்பர் 29ஆம் தேதி சொர்க்கவாசல் எனும் திரைப்படம் வெளியானது. இந்த படத்தினை அறிமுக இயக்குனர் சித்தார்த் விஸ்வநாத் இயக்க ஸ்வைப் ரைட் நிறுவனம் படத்தை தயாரித்து இருந்தது. கிறிஸ்தவ சேவியர் இந்த படத்திற்கு இசையமைக்க பிரின்ஸ் ஆண்டர்சன் இந்த படத்தின் ஒளிப்பதிவு பணிகளை மேற்கொண்டார். திரில்லர் கதைக்களத்தில் வெளியான இந்த படத்தில் ஆர் ஜே பாலாஜியுடன் இணைந்து செல்வராகவன், நட்டி நடராஜ், கருணாஸ், சானியா ஐயப்பன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர். இந்த படத்தில் வன்முறை காட்சிகள் இடம் பெற்றிருந்தது. இருப்பினும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது. அதே சமயம் ஆர்.ஜே. பாலாஜி மற்றும் செல்வராகவன் ஆகியோரின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த படம் வருகின்ற டிசம்பர் 27ஆம் தேதி நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகும் என அப்டேட் கிடைத்துள்ளது. விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என நம்பப்படுகிறது.