சூப்பர் ஸ்டாரின் மூத்த மகளான ஐஸ்வர்யா ரஜினிகாந்த் தனுஷின் ‘3’ , கௌதம் கார்த்திக்கின் ‘வை ராஜா வை’ உள்ளிட்ட படங்களை இயக்கி இருக்கிறார்.
தற்போது விஷ்ணு விஷால் மற்றும் விக்ராந்த் நடிப்பில் ‘லால் சலாம்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.
இந்நிலையில் ரஜினிகாந்தின் இரண்டாவது மகள் சௌந்தர்யா ரஜினிகாந்த் புதிய வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார்.
இவர் ஏற்கனவே கோச்சடையான் மற்றும் வேலையில்லா பட்டதாரி 2 போன்ற படங்களை இயக்கியிருக்கிறார்.
இதைத்தொடர்ந்து தற்போது அமேசான் பிரைம் நிறுவனத்திற்காக வெப் சீரிஸ் ஒன்றை இயக்க உள்ளார். இந்த வெப் சீரிஸில் நடிகர் சத்யராஜ் முன்னணி கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளது.
மேலும் மற்ற நடிகர்கள் குறித்த தகவல் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.