Homeசெய்திகள்சினிமாபூகம்பமாய் வெடிக்கும் பாலியல் புகார்கள்..... தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்!

பூகம்பமாய் வெடிக்கும் பாலியல் புகார்கள்….. தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்!

-

- Advertisement -

சமீபகாலமாக தென்னிந்திய திரை உலகில் பாலியல் துன்புறுத்தல் தொடர்பான புகார்கள், பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பூகம்பமாய் வெடிக்கும் பாலியல் புகார்கள்..... தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்!அதிலும் மலையாள சினிமாவில் பாலியல் துன்புறுத்தல்கள் ஹேமா கமிட்டியின் மூலம் வெளிச்சம் போட்டு காட்டப்பட்டதன் விளைவாக இச்சம்பவம் திரைத்துறையில் பெரும் பூகம்பத்தை கிளப்பியுள்ளது. எனவே இது தொடர்பாக தென்னிந்திய நடிகர் சங்கம் அதிரடியான தீர்மானங்களை நிறைவேற்றியுள்ளது. அதாவது இன்று (செப்டம்பர் 4) தென்னிந்திய நடிகர் சங்கத்தின் பெண் உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கத்தில் கமிட்டி சங்கத்தின் சார்பில் ஆலோசனைக் கூட்டம் தி நகர், நாம் பவுண்டேஷன் அரங்கில் நடைபெற்றது. தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர், துணைத் தலைவர் பூச்சி எஸ் முருகன் ஆகியோரின் முன்னிலையில் சில தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. அதில், பாதிக்கப்பட்டவர்களின் புகார்களின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்டவர்களை விசாரித்து அந்த புகாரில் உண்மை இருப்பின் அவர்கள் ஐந்து ஆண்டுகள் திரைத்துறையில் பணியாற்றுவதில் இருந்து தடை விதிக்க தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு பரிந்துரைக்கப்பட்டுள்ளது. மேலும் பாதிக்கப்பட்டவர்கள் காவல்துறையில் புகார் அளித்தல் தொடர்பான உதவிகளை கமிட்டி செய்யும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.பூகம்பமாய் வெடிக்கும் பாலியல் புகார்கள்..... தென்னிந்திய நடிகர் சங்கம் நிறைவேற்றிய அதிரடி தீர்மானங்கள்!

அடுத்தது பாலியல் குற்றங்களில் புகார் அளிக்கப்படும் நபர் மீது முதலில் எச்சரிக்கை விடப்படும் பின்னர் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் பாதிக்கப்பட்டவர்கள் தங்களின் புகார்களை தனி தொலைபேசி எண் மூலமாகவும் ஈமெயில் மூலமாகவும் தெரிவிக்கலாம் என்று அந்த தீர்மானத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் பாதிக்கப்பட்டவர்கள் இந்த கமிட்டியின் மூலம் தங்கள் புகார்களை அளிப்பதை விடுத்து நேரடியாக மீடியாக்களில் பேச வேண்டாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. பாதிக்கப்படுபவர்கள் சைபர் கிரைம் பிரிவு காவல் துறையில் புகார் அளித்தால் அவர்களுக்கு கமிட்டியில் இருந்து முழு ஒத்துழைப்பு வழங்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேசமயம் கமிட்டியின் நடவடிக்கைகளை தென்னிந்திய நடிகர் சங்கம் நேரடியாக கண்காணிக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

MUST READ