நடிகை திரிஷா பொன்னியின் செல்வன் படத்தின் பிரம்மாண்ட வெற்றிக்கு பிறகு தனது ஸ்டார் அந்தஸ்தை திரும்ப பெற்று விஜய், அஜித், சூர்யா என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்து மீண்டும் ஒரு ரவுண்டு வருகிறார்.
அது மட்டுமில்லாமல் இவர் தமிழ், மலையாளம், தெலுங்கு உள்ளிட்ட மொழிப் படங்களிலும் கவனம் செலுத்தி வருகிறார். சொல்லப்போனால் ஒரே நேரத்தில் பல படங்களில் நடித்து வருகிறார் திரிஷா. அதன்படி வருகின்ற 2025 ஆம் ஆண்டானது சௌத் குயின் திரிஷாவிற்கானது.
இவர் தற்போது அஜித்துடன் இணைந்து விடாமுயற்சி, குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து வருகிறார். அதில் விடாமுயற்சி திரைப்படமானது 2025 பொங்கலுக்கு வெளியாக இருக்கிறது. குட் பேட் அக்லி திரைப்படம் அடுத்த ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தது நடிகை திரிஷா, மணிரத்னம் மற்றும் கமல்ஹாசன் கூட்டணியில் உருவாக்கியுள்ள தக் லைஃப் திரைப்படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருக்கிறார். இந்த படம் அடுத்த வந்து ஜூன் மாதம் 5ஆம் தேதி திரைக்கு வர தயாராகி வருகிறது. மேலும் ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் உருவாகும் சூர்யா 45 திரைப்படத்தில் நடித்து வருகிறார் திரிஷா. இவ்வாறு அடுத்தடுத்த படங்களில் பிசியாக நடித்து வரும் இவர் மலையாளத்தில் டோவினோ தாமஸுடன் இணைந்து ஐடென்டிட்டி எனும் திரைப்படத்தில் நடித்திருக்கிறார். இந்த படமும் அடுத்த ஆண்டு ஜனவரி மாதத்தில் திரைக்கு கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மேலும் இவர் மோகன்லாலுடன் இணைந்து ராம் என்ற திரைப்படத்திலும் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. அதேபோல் தெலுங்கில் அடுத்த ஆண்டு ஜனவரி மாதம் சிரஞ்சீவியுடன் திரிஷா நடித்துள்ள விஷ்வம்பரா திரைப்படமும் திரைக்கு வர முழு வீச்சில் தயாராகி வருகிறது. எனவே 2025ஆம் ஆண்டானது நடிகை திரிஷாவிற்கு சொந்தமானது என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் பலரும் கமெண்ட் செய்து திரிஷாவை கொண்டாடி வருகின்றனர்.