Homeசெய்திகள்சினிமாவெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்… வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!

-

வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!கடந்த சில தினங்களாக தென்கோடி மாவட்டங்களான தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில் வரலாறு காணாத மழை பெய்து குடியிருப்பு பகுதிகள் வெள்ளத்தால் சூழப்பட்டுள்ளன. குறிப்பாக தூத்துக்குடி மாவட்டத்தில் ரயில் நிலையம் அதைச் சுற்றியுள்ள பகுதிகள், காயல்பட்டினம் பகுதியில் கார் மூழ்கும் அளவிற்கு வெள்ள நீர் சூழ்ந்துள்ளது. பல கிராமங்கள் சுற்றியுள்ள பகுதிகளுக்கு செல்லும் பாதைகள் உடைபட்டு தனித்து விடப்பட்டுள்ளன. பலரும் கிராமத்தைச் சுற்றி வெள்ள நீர் சூழ்ந்துள்ளதால் வெளியேற முடியாமல் தவித்து வருகின்றனர். நெல்லை மாவட்டத்திலும் குறிப்பாக பழைய பேருந்து நிலையம் பகுதியில் கடைகள் முழுவதும் நீரில் மூழ்கியுள்ள காட்சிகள் பதைபதைக்கச் செய்கின்றன. வெள்ளத்தில் தத்தளிக்கும் தென் மாவட்டங்கள்... வேதனையோடு வேண்டுகோள் விடுத்த மாரி செல்வராஜ்!சமீபத்தில் சென்னையில் ஏற்பட்ட வெள்ளத்தை விட இந்த காட்சிகள் கொடூரமாக உள்ளன. கிட்டத்தட்ட 94 சென்டிமீட்டர் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது. 1992 க்கு பிறகு தற்போது தான் இந்த அளவிற்கு மழை பெய்துள்ளது எனவும் அப்பகுதி மக்கள் கூறுகின்றனர். இதனால் அம்மக்களை ஹெலிகாப்டரின் உதவியுடன் மீட்பதற்கு பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

அதன்படி இயக்குனர் மாரி செல்வராஜ் வெள்ளநீரில் மாட்டிக்கொண்டு தவிக்கும் மக்களை விரைந்து மீட்க நடவடிக்கை செய்யும்படி அரசுக்கு வேதனையோடு வேண்டுகோள் விடுத்துள்ளார். ஆற்றுக்கும் குளத்துக்கும் நடுவே சிக்கித் தவிக்கும் பல சிற்றூர்களைச் சேர்ந்த மக்களை காப்பாற்றும் படியும் அவர் தன் மனக்குமுறலை பதிவிட்டுள்ளார். மீட்பு வாகனங்கள் படகுகள் எதுவுமே கிராம மக்களை சென்றடைய முடியவில்லை, அந்த அளவுக்கு வெள்ளத்தின் வேகம் உள்ளது எனவும், விரைந்து அம்மக்களை காக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டுள்ளார்.

MUST READ