Homeசெய்திகள்சினிமாலண்டன்ல கிராபிக்ஸ்😯 காளை பயிற்சிக்கு 1 கோடி🔥 வேற லெவலா உருவாகும் வாடிவாசல்!

லண்டன்ல கிராபிக்ஸ்😯 காளை பயிற்சிக்கு 1 கோடி🔥 வேற லெவலா உருவாகும் வாடிவாசல்!

-

- Advertisement -

‘வாடிவாசல்’ படம் குறித்த மிரட்டலான அப்டேட்கள் கிடைத்துள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் ‘வாடிவாசல்’ திரைப்படம் உருவாகி வருகிறது. இந்தப் படம் வாடிவாசல் என்ற நாவலை அடிப்படையாக வைத்து உருவாக உள்ளது.

இந்தப் படத்திற்காக சூர்யா காளைகளை அடக்கும் பயிற்சி மேற்கொண்டு வருகிறார். இந்தப் படத்திற்கான சோதனை படப்பிடிப்பு சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது. அந்த வீடியோ வெளியாகி பெரிய அளவில் வரவேற்பைப் பெற்றது.

‘விடுதலை’ படத்தை முடித்துள்ள வெற்றிமாறன் தற்போது ‘வாடிவாசல்‘ படத்திற்கான பணிகளைத் துவங்கி உள்ளார்.

இந்நிலையில் வாடிவாசல் படம் குறித்த லேட்டஸ்ட் அப்டேட் கிடைத்துள்ளது. படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் லண்டனில் நடைபெற்று வருகிறதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு தெரிவித்துள்ளார்.

மேலும் “காளைகளுக்கு பயிற்சி அளிப்பதற்காக மட்டும் ஒரு கோடி ரூபாய் செலவழித்துள்ளோம். தமிழ்நாட்டின் பல பகுதிகளிலிருந்து காளைகளை கொண்டு வந்து 5 நாட்களுக்கு பயிற்சி கொடுத்து பின்பு தான் சோதனை படப்பிடிப்பு நடத்தினோம். வாடிவாசல் படம் இந்திய அளவில் வியந்து பார்க்கப்படும் படமாக உருவாகும்” என்றும் அவர் தெரிவித்துள்ளார்

MUST READ