Homeசெய்திகள்சினிமாமறைந்த எஸ்.பி.பி.யின் ஏஐ குரல்... மகன் சரண் வழக்குப்பதிவு...

மறைந்த எஸ்.பி.பி.யின் ஏஐ குரல்… மகன் சரண் வழக்குப்பதிவு…

-

இளம் வயதிலேயே பாடகராக தன் வாழ்வைத் தொடங்கிய
எஸ்பிபி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி உள்ளிட்ட பல மொழி திரைப்படங்களில் 1966 இல் தொடங்கி 2020 வரை 40 ஆயிரத்துக்கும் அதிகமான பாடல்களை பாடியுள்ளார். உலகிலேயே அதிக எண்ணிக்கையிலான பாடல்களை பாடியவர் என்ற கின்னஸ் சாதனையையும் தன்னகத்தே கொண்டவர் எஸ்பிபி. எம்ஜிஆர், ஜெமினி, கணேசன், ரஜினிகாந்த், கமல்ஹாசன்,மோகன் உள்ளிட்ட பல நடிகர்களின் படங்களில் பாடியுள்ளார். இவரின் குரல் அனைத்து நடிகர்களுக்கும் பொருத்தமானதாக இருக்கும்.

மேலும் எஸ்பிபி முறையாக கர்நாடக இசை பயின்றதில்லை இருந்த போதிலும் ‘சங்கராபரணம்’ என்ற படத்தில் கர்நாடக இசையில் அமைந்த பாடலுக்காக தேசிய விருது பெற்றார். மேலும் இவர் ஆந்திர மாநிலத்தின் 25 நந்தி விருதுகளையும் பெற்றுள்ளார். இவர் 2001 ஆம் ஆண்டு பத்மஸ்ரீ விருதையும் 2011 ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதையும் பெற்றுள்ளார். இவர் இளையராஜாவின் இசையில் உள்ளத்தை உருக்கும் ஏராளமான பாடல்களை பாடி தன் குரலினால் அனைவரையும் உருக வைத்தவர்.

இந்நிலையில் இவர் கடந்த 2020-ம் ஆண்டு செப்டம்பர் 25-ம் தேதி உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில், ஏஐ மூலம் பின்னணி பாடகர் எஸ்.பி.பாலசுப்ரமணியத்தின் குரல் மூலம் பாடல் ஒன்றை பயன்படுத்திய கீடா கோலா பட இயக்குநர் மீது எஸ்.பி.பி.சரண் வழக்கு தொடர்ந்துள்ளார்.

MUST READ