நடிகர் விஜய் நடிப்பில் தி கிரேட்டஸ்ட் ஆஃப் ஆல் டைம் திரைப்படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை வெங்கட் பிரபு இயக்க ஏஜிஎஸ் நிறுவனம் இதை தயாரிக்கிறது. யுவன் சங்கர் ராஜா இதற்கு இசையமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே சென்னை, ரஷ்யா, திருவனந்தபுரம் போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. அதேசமயம் இந்தப் படமானது செப்டம்பர் 5ஆம் தேதி வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் படம் தொடர்பான அடுத்தடுத்து அப்டேட்டுகள் வெளியான வண்ணம் உள்ளன. அதன்படி ஏற்கனவே ஃபர்ஸ்ட் லுக், அதைத் தொடர்ந்து முதல் பாடலும் வெளியாகி ரசிகர்களின் கவனம் பெற்றது. அடுத்ததாக ஜூன் மாதத்தில் கோட் படத்தின் இரண்டாவது பாடல் வெளியாக இருப்பதாக வெங்கட் பிரபு அப்டேட் ஒன்றை கொடுத்துள்ளார். இந்த இரண்டாவது பாடல் விஜய்- திரிஷா நடனமாடும் குத்துப்பாடலாக இருக்கலாம் என்று சொல்லப்படுகிறது. தற்போது இந்த பாடல் குறித்த புதிய தகவல் ஒன்று கிடைத்துள்ளது.
அதாவது இந்த பாடலுக்கு நடனமாட முதலில் திரிஷாவுக்கு பதிலாக நடிகை ஸ்ரீலீலாவிடம் தான் கேட்கப்பட்டதாம். ஆனால் அந்த சமயத்தில் ஸ்ரீலீலாவிடம் அஜித்தின் குட் பேட் அக்லி படத்தில் நடிப்பது தொடர்பான பேச்சுவார்த்தை நடைபெற்று வந்ததாகவும் இதன் காரணமாக விஜய் படத்தில் நடனமாடும் வாய்ப்பை ஶ்ரீலீலா இழந்ததாகவும் கூறப்படுகிறது.
- Advertisement -