1969 காலகட்டங்களில் இருந்து தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழி படங்களில் நடித்து ரசிகர்களின் கனவு கன்னியாக திகழ்ந்தவர் தான் மறைந்த நடிகை ஸ்ரீதேவி. தயாரிப்பாளர் போனி கபூரை மணம் முடித்த ஶ்ரீ தேவிக்கு ஜான்வி கபூர் மற்றும் குஷி கபூர் என இரு மகள்கள் இருக்கின்றனர்.
மூத்த மகளான ஜான்வி கபூர் தற்போது இந்தி, தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களில் பிசியாக நடித்து வருகிறார். சமீபத்தில் தமிழில் இவர் அறிமுகமாக உள்ளதாக செய்திகள் வெளியானது. இந்நிலையில் ஸ்ரீதேவியின் இளைய மகள் குஷி கபூர் நடிகர் அதர்வாவிற்கு ஜோடியாக நடிக்க உள்ளதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. லைக்கா நிறுவனத்தின் தயாரிப்பிலும் சிவனின் உதவிய இயக்குனர் ஆகாஷ் இயக்கத்திலும் புதிய படம் உருவாக இருக்கிறது. இதற்கு அனிருத் இசையமைக்க இருக்கிறார். ஹை பட்ஜெட்டில் உருவாக இருக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு முழுவதும் வெளிநாட்டில் நடைபெற இருப்பதாக கூறப்படுகிறது. எனினும் இது சம்பந்தமான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.