Homeசெய்திகள்சினிமாஷாருக்கான் நடிக்கும் கிங்... விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு...

ஷாருக்கான் நடிக்கும் கிங்… விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு…

-

பாலிவுட் எனும் இந்தி திரையுலகில் பாக்ஸ் ஆபிஸ் நாயகனாக வலம் வருபவர் நடிகர் ஷாருக்கான். காதல், காமெடி, ஆக்‌ஷன், அதிரடி என எந்த ஜானரில் படம் நடித்தாலும், அது ஹிட் என்றே சொல்லலாம். அந்த வகையில் ஷாருக்கான் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியான மூன்று திரைப்படங்களுமே பாக்ஸ் ஆபிஸை அசரடித்தன. ஆண்டின் தொடக்கத்தில் சித்தார்த் ஆனந்த் இயக்கத்தில் ஷாருக்கான் நடித்த பதான் திரைப்படம் வெளியானது. இதில் தீபிகா படுகோன், ஜான் ஆபிரகாம் ஆகியோர் நடித்திருந்தனர். இத்திரைப்படம் சுமார் ஆயிரம் கோடி வசூலித்தது.

இதைத் தொடர்ந்து அட்லீ இயக்கத்தில் ஷாருக்கான், நயன்தாரா, விஜய் சேதுபதி ஆகியோர் நடித்த ஜவான் படம் வெளியானது. படத்திற்கு அனிருத் இசை அமைத்திருந்தார். இத்திரைப்படம் சுமார் ஆயிரத்து 200 கோடி ரூபாய் வசூல் செய்து பெரும் சாதனை படைத்தது. தொடர்ந்து ஷாருக்கான், டாப்ஸி ஆகியோர் நடித்த டன்கி திரைப்படம் ஆண்டு இறுதியில் வெளியானது. இதைத் தொடர்ந்து, ஷாருக்கான் நடிக்கும் அடுத்த திரைப்படம் தான் கிங். இத்திரைப்படத்தை சுஜோய் கோஷ் இயக்குகிறார்.

அதிரடி ஆக்‌ஷன் கதைக்களத்தில் உருவாகும் இப்படத்தில் ஷாருக்கானின் மகள் சுஹானாகானும் முக்கிய கதாபாத்திரம் ஒன்றில் நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு வரும் செப்டம்பர் மாதம் தொடங்குகிறது. அதற்கான முன்னணி வேலைகள் தற்போது நடைபெற்று வருகின்றன. இந்நிலையில், இத்திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வரும் ஜூன் 25-ம் தேதி வெளியாகும் என்று கூறப்படுகிறது. அன்றைய தினமே படத்தின் மற்ற நடிகர் நடிகைகள் குறித்த தகவலும் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

MUST READ