Homeசெய்திகள்சினிமாஅட்லீ சிறப்பா சம்பவம் செய்வாரு போலயே... மீண்டும் தள்ளிப் போகும் 'ஜவான்' படத்தின் ரிலீஸ்!

அட்லீ சிறப்பா சம்பவம் செய்வாரு போலயே… மீண்டும் தள்ளிப் போகும் ‘ஜவான்’ படத்தின் ரிலீஸ்!

-

- Advertisement -

ஷாருக் கான், அட்லீ கூட்டணியில் உருவாகி வரும் ‘ஜவான்’ படத்தின் ரிலீஸ் மீண்டும் தள்ளி வைக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

தமிழில் நல்ல வரவேற்பைப் பெற்ற அட்லீ தற்போது இந்தி பக்கம் சென்று பாலிவுட் பாட்ஷா ஷாருக் கான் நடிப்பில் ‘ஜவான்’ படத்தை இயக்கி வருகிறார்.

jawan
jawan

இந்தப் படத்தில் நயன்தாரா கதாநாயகியாக நடிக்கிறார். விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். பாலிவுட் நடிகை சான்யா மல்ஹோத்ரா, ப்ரியா மணி, சுனில் குரோவர், யோகிபாபு உள்ளிட்டோரும் இந்தப் படத்தில் நடிக்கின்றனர்.

ஜவான் படத்தை ஷாருக் கானின் மனைவி கௌரி கான் தயாரிக்கிறார். ஜவான் திரைப்படம் ஹிந்தி, தமிழ், தெலுங்கு, மலையாளம் & கன்னடம் ஆகிய மொழிகளில் வெளியாகிறது. இந்தப் படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.

இந்தப் படத்தில் தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் அல்லது விஜய் இருவரில் ஒருவர் சிறப்புத் தோற்றத்தில் நடிக்க இருப்பதாகக் கூறப்படுகிறது.

ஜவான் திரைப்படம் வரும் ஜூன் மாதம் 2-ம் தேதி வெளியாக இருப்பதாகக் கூறப்பட்டது. அதையடுத்து தள்ளிவைக்கப்பட்டதாகக் கூறப்பட்டது. தற்போது படத்தின் கிராபிக்ஸ் பணிகள் ஏராளம் இருப்பதால் சிறந்ததைக் கொடுப்பதற்காக படக்குழுவினர் இன்னும் சில கால அவகாசம் எடுத்துக் கொள்ள இருக்கின்றனராம்.

எனவே ‘ஜவான்’ திரைப்படம் ஆகஸ்ட் மாதம் வெளியாகலாம் என்று சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அட்லீ சிறப்பான சம்பவம் செய்யப்போறாரு போலயே!

MUST READ