Homeசெய்திகள்சினிமாஒடிசாவில் நடைபெறும் 'SSMB 29 ஷூட்டிங்'..... நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு!

ஒடிசாவில் நடைபெறும் ‘SSMB 29 ஷூட்டிங்’….. நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு!

-

- Advertisement -

பாகுபலி 1, பாகுபலி 2 ஆகிய படங்களை இயக்கி இந்திய அளவில் பிரபலமானவர் ராஜமௌலி. அந்த வகையில் பிரம்மாண்ட இயக்குனராக வலம் வரும் இவரை ரசிகர்கள் பலரும் கொண்டாடி வருகின்றனர். ஒடிசாவில் நடைபெறும் 'SSMB 29 ஷூட்டிங்'..... நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு!ஏனென்றால் இவருடைய பாகுபலி சீரிஸ் மட்டுமல்லாமல் ஆர்ஆர்ஆர் படமும் தரமான படமாக அமைந்து சூப்பர் டூப்பர் ஹிட் அடித்தது. எனவே ராஜமௌலியின் அடுத்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதன்படி மகேஷ் பாபு நடிப்பில் புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார் ராஜமௌலி. இந்த படத்திற்கு தற்காலிகமாக SSMB 29 என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. சுமார் ரூ.1000 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு வரும் இந்த படத்தில் மகேஷ் பாபுவுடன் இணைந்து பிரியங்கா சோப்ரா முக்கிய கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். மேலும் இப்படத்தில் நடிகர் பிரித்விராஜ் வில்லனாக நடிக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் தற்போது ஒடிசாவில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. சமீபத்தில் கூட SSMB 29 படப்பிடிப்பு தளத்தில் எடுக்கப்பட்ட சில காட்சிகள் இணையத்தில் கசிந்து வைரலாகி வந்தது. இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் படப்பிடிப்பில் நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்றுள்ளதாக அப்டேட் கிடைத்துள்ளது.ஒடிசாவில் நடைபெறும் 'SSMB 29 ஷூட்டிங்'..... நடிகை பிரியங்கா சோப்ரா பங்கேற்பு! மேலும் இந்த படத்தில் பணிபுரிய சுமார் 500 பேர் கொண்ட குழுவினர் ஒடிசாவிற்கு சென்றிருப்பதாகவும், இந்த படப்பிடிப்பை வருகின்ற மார்ச் 28 வரை தியோமாலி மற்றும் தலமாலி மலைப்பகுதிகளில் நடத்த மாவட்ட நிர்வாகம் அனுமதி அளித்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் தெரிவிக்கிறது. இனிவரும் நாட்களில் மற்ற அப்டேட்டுகள் வெளியாகும் என நம்பப்படுகிறது.

MUST READ