Homeசெய்திகள்சினிமாஸ்டார் படத்தின் புகைப்படங்கள்... டிவிட்டரில் டிரெண்டாகும் கவின்...

ஸ்டார் படத்தின் புகைப்படங்கள்… டிவிட்டரில் டிரெண்டாகும் கவின்…

-

- Advertisement -
ஸ்டார் படத்திலிருந்து வெளியாகியிருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் டிரெண்டாகி வருகின்றன.

சின்னத்திரையிலிருந்து வெள்ளித்திரைக்கு வந்து ஜொலித்துக் கொண்டிருக்கும் முன்னணி நடிகர் கவின். விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சரவணன் மீனாட்சி படத்தில் நாயகனாக நடித்தவர் கவின். மேலும், நிகழ்ச்சிகளிலும் தொகுப்பாளராக அவர் பணிபுரிந்துள்ளார். சின்னத்திரையில் இருந்தபோது, நகைச்சுவை குணத்திற்கு கவின் பிரபலம் என்று சொல்லலாம். இதையடுத்து, லிப்ட் படத்தின் மூலம் அவர் திரைக்கு அறிமுகம் ஆகினார்.

இப்படத்தைத் தொடர்ந்து கவின் மற்றும் அபர்ணா தாஸ் இணைந்து நடித்த திரைப்படம் டாடா. இத்திரைப்படம் பெரும் வெற்றி பெற்றது. இதையடுத்து கவின் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் ஸ்டார். ப்யார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளன் எழுதி இயக்குகிறார். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். கே எழிலரசு படத்திற்கு ஒளிப்பதிவு செய்கிறார். ரைஸ் ஈஸ்ட் என்டர்டெயின்மென்ட் நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கிறது.

சமீபத்தில் யுவன் சங்கர் ராஜாவின் பிறந்த நாளை முன்னிட்டு படத்தின் ப்ரோமோ வெளியானது. இது ரசிகர்களிடையே வரவேற்பை பெற்றது. இந்நிலையில், இத்திரைப்படத்திலிருந்து புதிய புகைப்படங்களை படக்குழு பகிர்ந்துள்ளது. மேலும், 3 ஆண்டுகளுக்கு முன்பு நான் நினைத்த ஒரு காட்சியை இன்று வெற்றிகரமாக படமாக்கி இருப்பதாக படத்தின் இயக்குநர் எலன் தெரிவித்துள்ளார். மேலும், இக்காட்சி இடைவேளைக்கு பிறகு வரும் முதல் காட்சி என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

MUST READ