Homeசெய்திகள்சினிமாதிரையரங்குகளில் அதிரடி கிளப்பும் ஸ்டார்.... மேக்கிங் காணொலி ரிலீஸ்...

திரையரங்குகளில் அதிரடி கிளப்பும் ஸ்டார்…. மேக்கிங் காணொலி ரிலீஸ்…

-

- Advertisement -
லிப்ட், மற்றும் டாடா படங்களின் வெற்றி கவினுக்கு வெள்ளித்திரையில் படிக்கட்டுகளாய் மாறி இருக்கிறது. அவரது டாடா திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. படம் தாமதமாக வெளியானாலும், வசூலிலும் வேட்டையாடியது. இதனால், கவினுக்கு அடுத்தடுத்து பட வாய்ப்புகள் குவியத் தொடங்கி இருக்கின்றன. பியார் பிரேமா காதல் படத்தை இயக்கிய இளளின் ஸ்டார் திரைப்படத்தில் கவின் நடித்துள்ளார்.

ரைஸ் ஈஸ்ட் நிறுவனம் இத்திரைப்படத்தை தயாரித்து இருக்கிறது. யுவன் சங்கர் ராஜா படத்திற்கு இசை அமைத்துள்ளார். ஸ்டார் படம் கடந்த பிப்ரவரி 14-ம் தேதி காதலர் தினத்தன்று வௌியாகும் என கூறப்பட்ட நிலையில், தொடர்ந்து படம் தாமதமானது. ஒரு வழியாக ஸ்டார் திரைப்படம், இன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் ஏகபோக வரவேற்பை பெற்று வருகிறது. படம் பார்த்த அனைவரும் ஸ்டார் திரைப்படத்தை கொண்டாடி வருகின்றனர்.

தமிழ்நாடு முழுவதும் சுமார் 250-க்கும் மேற்பட்ட திரையரங்குகளில் ஸ்டார் திரைப்படம் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இந்நிலையில், படத்தின் கிளைமாக்ஸ் காட்சியின் மேக்கிங் காணொலியை படக்குழு சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளது. இது இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது.

MUST READ