STR 49 படப்பிடிப்பு துபாயில் நடைபெற இருப்பதாக தகவல் கசிந்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிம்பு தற்போது அடுத்தடுத்த படங்களில் நடிப்பதற்கு கமிட் ஆகி இருக்கிறார். அதன்படி இவர் தேசிங்கு பெரியசாமி இயக்கத்தில் தனது 50வது படத்திலும், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் தனது 51வது படத்திலும் நடிப்பதற்கு ஒப்பந்தமாகியுள்ளார். இதற்கிடையில் இவர், பார்க்கிங் படத்தின் இயக்குனர் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்கத்தில் 49வது திரைப்படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. அதன்படி STR 49 என்று தற்காலிகமாக தலைப்பு வைக்கப்பட்டிருக்கும் இந்த படம் தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியான நிலையில் இப்படத்திற்கு சாய் அபியங்கர் இதற்கு இசை அமைக்கவுள்ளார் எனவும் சொல்லப்படுகிறது. மேலும் சிம்புவுக்கு ஜோடியாக சாய்பல்லவி நடிக்க இருப்பதாக சமீப காலமாக தகவல் வெளியாகி வருகின்றன. அடுத்தது சந்தானம் இந்த படத்தில் மீண்டும் காமெடியனாக நடிக்கப் போகிறார் எனவும் கூறப்படுகிறது. நீண்ட இடைவெளிக்கு பிறகு சிம்பு, சந்தானம் கூட்டணியில் உருவாகும் இந்த படத்தின் மீதான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் இருந்து வருகிறது. அதே சமயம் இப்படம் கல்லூரி தொடர்பான கதைக்களமாக இருக்க வாய்ப்புள்ளதாகவும் சமூக வலைதளங்களில் தகவல் பரவி வருகிறது. இந்நிலையில் விரைவில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருப்பதாகவும் அதன்படி படப்பிடிப்பை துபாயில் நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளதாகவும் லேட்டஸ்ட் அப்டேட் வெளிவந்துள்ளது. மற்ற அப்டேட்டுகள் இனிவரும் நாட்களில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.