கோட் படம் குறித்து அதிரடி தகவலை வெளியிட்ட ஸ்டண்ட் மாஸ்டர்
- Advertisement -

கோலிவுட்டின் கொண்டாட்ட நாயகன் நடிகர் விஜய். அவர் தமிழ் மொழியில் மட்டுமே நடித்தாலும், இந்திய திரை உலகம் முழுவதும் அவருக்கு ரசிகர்கள் உள்ளனர். குட்டி சுட்டிகள் முதல் பெரியவர்கள் வரை விஜய்க்கு பலதரப்பட்ட ரசிகர்கள் உள்ளனர். விஜய் நடிப்பில் வௌியான லியோ படம் பெரும் வரவேற்பை பெற்றது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் வெளியான லியோ, சுமார் 600 கோடிக்கு மேல் வசூலித்து பெரிய ஹிட் அடித்தது.

தற்போது விஜய் நடிப்பில் உருவாகி வரும் திரைப்படம் கோட். அதாவது தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம். இப்படத்தை வெங்கட் பிரபு இயக்குகிறார். இது விஜய் நடிக்கும் 68-வது திரைப்படம் ஆகும். அதில், மீனாட்சி சௌத்ரி, சினேகா, லைலா, மைக் மோகன், பிரசாந்த் மற்றும் பிரபுதேவா உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கிறார். பிரேம்ஜி உள்பட வெங்கட் பிரபுவின் ஆஸ்தான நாயர்களும் இதில் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்க உள்ளனர். இப்படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

இந்நிலையில், கோட் திரைப்படம் குறித்து அப்படத்தின் ஸ்டண்ட் மாஸ்டர் திலீப் சுப்பராயன் சுவாரஸ்ய தகவல்களை பகிர்ந்துள்ளார். இதுவரை 5-க்கும் மேற்ப்பட்ட சண்டைக் காட்சிகள் படமாக்கப்பட்டு உள்ளது. அண்மையில் வெளியான போஸ்டரில் நடிகர்களின் பின்னால் இருந்த ஹெலிகாப்டர் போஸ்டருக்காக வடிவமைக்கப்பட்டது இல்லை என்றும், அதன் பின் கதைக்களமே அமைந்துள்ளது என்றும் தெரிவித்தார்.