Homeசெய்திகள்சினிமாசிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்!

சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்!

-

நடிகர் சிவகார்த்திகேயன் தற்போது தமிழ் சினிமாவில் வலம் வரும் முக்கியமான நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் சமீபத்தில் சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான அமரன் திரைப்படம் சிவகார்த்திகேயனின் கேரியரில் மிகவும் முக்கியமான பாடமாக அமைந்து அவரை அடுத்த கட்டத்திற்கு கொண்டு சென்றுள்ளது. சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்!இதைத்தொடர்ந்து சிவகார்த்திகேயன் தனது அடுத்தடுத்த படங்களை மிக கவனமாக தேர்ந்தெடுத்து வருகிறார். அந்த வகையில் ஏற்கனவே டான் படத்தின் மூலம் 100 கோடியை அள்ளிய சிபி சக்கரவர்த்தி இயக்கத்தில் மீண்டும் நடிக்க உள்ளார் சிவகார்த்திகேயன். அதேசமயம் சுதா கொங்கரா இயக்கத்தில் புதிய படம் ஒன்றில் நடிப்பதற்கு கமிட்டாகி இருக்கிறார். தற்போது சிவகார்த்திகேயன் ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில் தனது 23வது திரைப்படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்புகள் விரைவில் நிறைவடையே இருக்கிறது. இதைத்தொடர்ந்து SK 24 மற்றும் SK 25 ஆகிய இரண்டு படங்களிலும் ஒரே நேரத்தில் நடிக்க இருக்கிறார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் பிறந்தநாளில் ரசிகர்களுக்காக காத்திருக்கும் அடுத்தடுத்த சர்ப்ரைஸ்!இந்த இரண்டு படங்களுக்குமே ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பு நிலவி வரும் நிலையில் அடுத்த ஆண்டு பிப்ரவரி மாதம் 17ஆம் தேதி சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு இரண்டு படங்களின் அறிவிப்பும் வெளியாகும் என சமூக வலைதளங்களில் செய்திகள் பரவி வருகிறது. அதன்படி SK 24 படத்தின் டைட்டில் டீசர் சிவகார்த்திகேயனின் பிறந்த நாளை முன்னிட்டு வெளியிட படக்குழு திட்டமிட்டு வருவதாக தற்போதைய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும் SK 24 படத்திற்கு பாஸ் என்ற தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக ஏற்கனவே செய்திகள் சமூக வலைதளங்களில் உலா வந்தது குறிப்பிடத்தக்கது.

MUST READ