Homeசெய்திகள்சினிமாமறு வெளியீட்டில் அசத்தும் விண்ணைத்தாண்டி வருவாயா... எகிறும் வசூல்...

மறு வெளியீட்டில் அசத்தும் விண்ணைத்தாண்டி வருவாயா… எகிறும் வசூல்…

-

`காதல் டிலைட்’ கௌதம் மேனனுக்குக் காலமெல்லாம் பெயர் சொல்லும் அக்மார்க் `காதலர் ஸ்பெஷல்’ திரைப்படம் `விண்ணைத்தாண்டி வருவாயா’. சிம்பு – த்ரிஷாவின் நடிப்பும், கவுதமின் கலர்ஃபுல் கதையும், ரஹ்மானின் மென்மையான இசையும், திரையில் மேஜிக்கை நடத்தியது. படத்தின் ஒவ்வொரு ப்ரேமிலும், ஜெஸியாகவும், கார்த்திக்காகவும் வாழ்ந்திருந்தனர் த்ரிஷாவும், சிம்புவும். `என் கண்ணு வழியா உன்னை யாரும் பார்க்கலைபோல!’, என அழகழகான ஹைக்கூ வசனங்களே படம் முழுக்கக் காதலை நிரப்பியது.

கடந்த 2010-ம் ஆண்டு கௌதம் மேனன் இயக்கத்தில் சிம்பு மற்றும் த்ரிஷா நடிப்பில் வெளியான திரைப்படம் விண்ணைத்தாண்டி வருவாயா. அந்த நாள் முதல் இந்த நாள் வரை தமிழில் ஆயிரக்கணக்கில் காதல் படங்கள் வெளியானாலும், விண்ணைத்தாண்டி வருவாயா திரைப்படம் தனக்கான இடத்தை தனியாக உருவாக்கிக் கொண்டது. படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்திருந்தார். அவரது இசையில் வெளியான அனைத்து பாடல்களும் மாபெரும் ஹிட் அடித்தன. இன்று வரை காதலர்களின் விருப்ப பட்டியலில் நிச்சயம் விண்ணைத்தாண்டி வருவாயா பட பாடல்கள் இடம் பெற்றிருக்கும்.

இத்திரைப்படம் சென்னையில் உள்ள மல்டிபிளக்ஸில் கடந்த 2 வருடங்களைக் கடந்து திரையிடப்பட்டு வருகிறது. தினமும் ஒரு காட்சியாக மொத்தம் 750 நாட்களை படம் கடந்துள்ளது. தமிழ் படங்களை பொறுத்தவரை, மறுவெளியீட்டில் அதிக நாட்கள் ஓடிய திரைப்படம் என்ற பெருமை விண்ணைத்தாண்டி வருவாயா படத்திற்கு மட்டும் தான்.

MUST READ