இயக்குனர் சுதா கொங்கரா, ரவி மோகன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
ரவி மோகன் தமிழ் சினிமாவில் வலம் வரும் முன்னணி நடிகர்களில் ஒருவர் ஆவார். அந்த வகையில் இவர் தமிழ் சினிமாவில் கிட்டத்தட்ட 20 வருடங்களுக்கும் மேலாக பணியாற்றி வருகிறார். இவரது நடிப்பில் வெளியான ஜெயம், சந்தோஷ் சுப்பிரமணியம், தனி ஒருவன் போன்ற படங்கள் வெற்றி படங்களாக அமைந்தன. கடைசியாக இவரது நடிப்பில் காதலிக்க நேரமில்லை எனும் திரைப்படம் வெளியானது. இதன் பின்னர் ரவி, கராத்தே பாபு படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். அதேசமயம் பராசக்தி திரைப்படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். இந்தப் படத்தில் சிவகார்த்திகேயன் கதாநாயகனாக நடிக்க அதர்வா, ஸ்ரீலீலா ஆகியோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர். இந்த படத்தை டான் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்க சுதா கொங்கரா படத்தை இயக்குகிறார்.
ஜி.வி. பிரகாஷ் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் ஏற்கனவே தொடங்கப்பட்டு மதுரை, சிதம்பரம், காரைக்குடி போன்ற பகுதிகளில் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. மேலும் இதன் அடுத்த கட்ட படப்பிடிப்பை இலங்கையில் நடத்தப் படக்ழு திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகி வருகின்றன. இந்நிலையில் இயக்குனர் சுதா கொங்கரா, நடிகர் ரவிமோகன் குறித்து பதிவு ஒன்றினை வெளியிட்டுள்ளார்.
When ravi removes his plate to pose for the picture to show how he’s starving for the look and then we catch him with his food when he thinks we are not clicking🤨!!!!! @iam_RaviMohan @Atharvaamurali @dop007 #shootdiaries #Parasakthi pic.twitter.com/LhGvcFedQZ
— Sudha Kongara (@Sudha_Kongara) February 25, 2025
அந்த பதிவில், “சாப்பிடும் நேரத்தில் புகைப்படம் எடுக்கும் போது ரவி அவருடைய தட்டை மறைத்துவிட்டு போஸ் கொடுத்திருக்கிறார். அவருடைய தோற்றத்திற்காக அவர் பட்டினி கிடக்கிறார் என்பதை காட்டுவதற்காக. ஆனால் அதற்குப் பிறகு அவரை சாப்பாடுடன் படம் பிடிக்கவில்லை என்று அவர் நினைக்கும் போது நாங்கள் உணவுடன் அவரை படம் பிடித்து விட்டோம்” என்று குறிப்பிட்டுள்ளார்.
இவ்வாறு பராசக்தி படக்குழு அனைவருமே மகிழ்ச்சியாக படப்பிடிப்பை நடத்தி வருகின்றனர். இதன் மூலம் அந்த படம் நன்றாக உருவாகிறது என்றும் இப்படம் நிச்சயம் பிளாக்பஸ்டர் ஹிட் அடிக்கும் என்றும் பலரும் தங்களின் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.