Homeசெய்திகள்சினிமாலண்டன் கேளிக்கை விருந்தில் ஷாருக்கான் மகள் - அமிதாப் பச்சன் பேரன்... புகைப்படங்கள் வைரல்...

லண்டன் கேளிக்கை விருந்தில் ஷாருக்கான் மகள் – அமிதாப் பச்சன் பேரன்… புகைப்படங்கள் வைரல்…

-

பாலிவுட்டில் ஜோயா அக்தரின் இயக்கத்தில் உருவான திரைப்படம் தி ஆர்ச்சீஸ். அமிதாப் பச்சனின் பேரன் அகஸ்தியா நந்தா , ஷாருக்கானின் மகள் சுஹானா கான் மற்றும் தயாரிப்பாளர் போனி கபூரின் மகள் குஷி கபூர் இப்படத்தின் மூலம் திரையுலகிற்கு அறிமுகமாகினர். இத்திரைப்படம் கடந்த நவம்பர் மாதம் நேரடியாக ஓடிடி தளத்தில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது.
இதில் மிஹிர் அஹுஜா, வேதாங் ரெய்னா, யுவராஜ் மெண்டா மற்றும் அதிதி சைகல் ஆகியோரும் நடித்திருந்தனர். ஷோயா என்பவர் இத்திரைப்படத்தை இயக்கி இருந்தார். இப்படத்தின் மூலம் பல டாப் ஹீரோக்களின் வாரிசுகள் பாலிவுட் திரையுலகில் அடியெடுத்து வைத்தனர். அந்த வகையில் படத்தில் நடித்த சுஹானா கானும், அகஸ்தியாவும் நெருங்கிய நண்பர்கள்.
இருவரும் பல இடங்களில் ஒன்றாக இணைந்து வலம் வந்துள்ளனர். மேலும், இருவரும் காதலித்து வருவதாகவும் பல செய்திகள் வெளியாகின. இதற்கு இரு தரப்பு குடும்பத்தினரும் மறுப்பு தெரிவித்து வந்தனர். இந்நிலையில், லண்டனில் நடைபெற்ற இரவு நேர கேளிக்கை விருந்து ஒன்றில் ஷாருக்கானி மகள் சுஹானா கானும், அமிதாப்பச்சனின் பேரன் அகஸ்தியாவும் ஒன்றாக மது அருந்தி நடனமாடிய புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கின்றன.

MUST READ