நடிகை சுனைனா கடந்த 2008 ஆம் ஆண்டு காதலில் விழுந்தேன் படத்தின் மூலம் அறிமுகமானவர். அதன் பின் வம்சம் லத்தி ட்ரிப் எஸ்டேட் உள்ளிட்ட பல படங்களில் நடித்துள்ளார்.
மேலும் மலையாளம் தெலுங்கு உள்ளிட்ட மொழி படங்களிலும் நடித்துள்ளார்.
தற்போது இவர் ‘ரெஜினா‘ எனும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இதில் இவருடன் விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்டத்தை மலையாள இயக்குனர் டோமின் டி சில்வா இயக்கியுள்ளார்.
இந்த படம் எல்லோ பியர் புரொடக்ஷன் நிறுவனத்தின் தயாரிப்பிலும் சதீஷ் நாயர் இசையிலும் உருவாகி உள்ளது.
கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாகியுள்ள இந்த படத்தின் முதல் பாடல் மற்றும் டீசர் அடுத்தடுத்து வெளியாகி நல்ல வரவேற்பு பெற்றது. இந்த படம் சுரேனாவிற்கு ஒரு கம் பேக் திரைப்படமாக அமையும் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் இந்த படம் தமிழ்,தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் உலகமெங்கும் வெளியாக இருக்கிறது. அந்த வகையில் இந்த படம் வருகின்ற ஜூன் 23ஆம் தேதி வெளியாகும் என்று பட குழுவினர் போஸ்டர் ஒன்றை வெளியிட்டு அறிவித்துள்ளனர்.