நடிகை சுனைனா நடிப்பில் உருவான ரெஜினா திரைப்படத்தின் ஓடிடி ரிலீஸ் தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
நடிகை சுனைனா ரெஜினா என்னும் திரைப்படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்தப் படத்தை டோமின் டி சில்வா இயக்கியுள்ளார். எல்லோ பியர் புரொடக்ஷன்ஸ் நிறுவனத்தின் கீழ் இப்படம் தயாரிக்கப்பட்டுள்ளது. சதீஷ் நாயர் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்தப் படத்தில் சுனைனா உடன் இணைந்து விவேக் பிரசன்னா, நிவாஸ் ஆதித்தன் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
கதாநாயகியை முன்னணியாக கொண்டு உருவாக்கப்பட்ட இந்த படம் கடந்த ஜூன் 23ஆம் தேதி தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாகி இருந்தது.
இந்நிலையில் இப்படம் வருகின்ற ஜூலை 25ஆம் தேதி சிம்ப்ளி சௌத் என்ற ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.