Homeசெய்திகள்சினிமாமீண்டும் இணையும் சுந்தர். சி, வடிவேலு கூட்டணி!

மீண்டும் இணையும் சுந்தர். சி, வடிவேலு கூட்டணி!

-

- Advertisement -

சுந்தர். சி தமிழ் சினிமாவில் நடிகராகவும் இயக்குனராகவும் வலம் வருபவர். அதன்படி இவர் அரண்மனை படத்தின் முதல் மூன்று பாகங்களுக்கு பின்னர் அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கியிருந்தார். மீண்டும் இணையும் சுந்தர். சி, வடிவேலு கூட்டணி!இந்த படம் கடந்த மே 3 அன்று வெளியாகி வசூலை வாரிக் குவித்து வருகிறது. இதைத் தொடர்ந்து சுந்தர் சி, கலகலப்பு 3 திரைப்படத்தை இயக்குவார் என்று சமீப காலமாக செய்திகள் பரவி வருகின்றன. இதில் விமல், மிர்ச்சி சிவா, வாணி போஜன் உள்ளிட்டோர் நடிக்க இருப்பதாகவும் சொல்லப்படுகிறது. அதே சமயம் சுந்தர் சி, மற்றொரு ஹாரர் திரைப்படத்தையும் இயக்கப் போகிறாராம். அதாவது ஏற்கனவே வெளியான தகவலின் படி சுந்தர் சி இயக்கம் இருக்கும் புதிய படத்தில் தமன்னா நடிப்பார் என்று செய்திகள் வெளிவந்தன. சுந்தர் சி யின் மற்ற படங்களைப் போல் இந்த படமும் காமெடி கலந்த ஹாரர் படமாக உருவாக இருக்கிறது. மீண்டும் இணையும் சுந்தர். சி, வடிவேலு கூட்டணி!இந்நிலையில் இதன் கூடுதல் தகவல் என்னவென்றால் தமன்னா நடிப்பில் சுந்தர் சி இயக்க இருக்கும் புதிய படத்தில் நடிகர் வடிவேலு காமெடி கதாபாத்திரத்தில் நடிக்கப் போகிறார் என்று புதிய அப்டேட் கிடைத்துள்ளது. இருப்பினும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று நம்பப்படுகிறது.

ஏற்கனவே நடிகர் வடிவேலு, சுந்தர் சி இயக்கத்தில் வின்னர், லண்டன், கிரி போன்ற பல படங்களில் நடித்து பெயர் பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீண்டும் இந்த கூட்டணி இணைய இருக்கும் தகவல் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ