Homeசெய்திகள்சினிமாசுந்தர். சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுந்தர். சி, வடிவேலு கூட்டணியின் ‘கேங்கர்ஸ்’….. ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

சுந்தர். சி, வடிவேலு கூட்டணியில் உருவாகும் கேங்கர்ஸ் படத்தின் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது.சுந்தர். சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுந்தர். சி தமிழ் சினிமாவில் இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார் என்பது அனைவரும் அறிந்ததே. இவர் கடைசியாக அரண்மனை 4 திரைப்படத்தை இயக்கிய வெற்றி கண்டார். அதைத்தொடர்ந்து புதிய படம் ஒன்றை இயக்கி வருகிறார். இந்த படத்திற்கு கேங்கர்ஸ் என்று தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் சுந்தர். சி ஹீரோவாக நடிக்க வடிவேலுவும் அவருடன் இணைந்து முன்னணி கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். ஏற்கனவே நடிகர் வடிவேலு சுந்தர்.சி இயக்கத்தின் வெளியான கிரி வின்னர் போன்ற படங்களில் நகைச்சுவை கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதேசமயம் சுந்தர். சி இணைந்து தலைநகரம் போன்ற படங்களிலும் நடித்திருக்கிறார் வடிவேலு. இந்நிலையில் மீண்டும் இந்த கூட்டணி புதிய படம் ஒன்றில் இணைந்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.சுந்தர். சி, வடிவேலு கூட்டணியின் 'கேங்கர்ஸ்'..... ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு! மேலும் இந்த படத்தில் ராஷி கண்ணா, கேத்ரின் தெரசா உள்ளிட்டோரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து வருவதாக சொல்லப்படுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த படத்தினை சுந்தர்.சி தயாரிக்க சத்யா. சி இசையமைக்கிறார். வெங்கட் ராகவன் இதன் ஒளிப்பதிவு பணிகளை கவனிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

MUST READ