இயக்குனர் சுந்தர்.சி, சங்கமித்ரா படம் குறித்து பேசி உள்ளார்.
திரைத்துறையில் பணியாற்றுபவர்களுக்கு நிச்சயம் கனவு திட்டம் என்ற ஒன்று இருக்கும். அந்த வகையில் பிரபல இயக்குனரும், நடிகருமான சுந்தர்.சிக்கும் சங்கமித்ரா என்ற கனவு திட்டம் இருக்கிறது. இந்த படத்தை வரலாற்றுப் பின்னணியில் எடுக்க சுந்தர்.சி திட்டமிட்டிருந்தார். அதன்படி இப்படம் தேனாண்டாள் ஃபிலிம்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாராகும் படத்தில் ரவி மோகன், ஆர்யா, ஸ்ருதிஹாசன் ஆகியோர் நடிக்க உள்ளதாக அறிவிப்பு வெளியானது. மேலும் இப்படம் ரூ. 250 கோடி பட்ஜெட்டில் உருவாக இருப்பதாகவும் தகவல் கசிந்தது. ஆனால் வணிக ரீதியிலான சில பிரச்சனைகள் காரணமாக இந்த படம் அப்படியே கிடப்பில் போடப்பட்டது. அதேசமயம் ரவி மோகன் தொடர்ந்து பல படங்களில் பிஸியாக நடித்து வருவதால் சங்கமித்ரா திரைப்படத்தில் ரவி மோகனுக்கு பதிலாக பிரித்விவிராஜ் நடிக்க வாய்ப்புள்ளதாகவும் தகவல் கசிந்தது. இருப்பினும் படக்குழு தரப்பில் இது அறிவிக்கப்படவில்லை.
#SundarC about #Sangamithra
– Sangamithra work start from next year, once i start Sangamithra 2 to 3 years i only work on this film.pic.twitter.com/G8j4TTinS9
— Movie Tamil (@MovieTamil4) April 19, 2025
இந்நிலையில் தான் நடிகர் சுந்தர்.சி கடந்த சில மாதங்களாகவே பேட்டிகளில் அடிக்கடி சங்கமித்ரா படம் குறித்து பேசி வருகிறார். அந்த வகையில் தற்போது சுந்தர்.சி, “சங்கமித்ரா திரைப்படம் அடுத்த ஆண்டு தொடங்கும். இந்த படத்தை எடுக்க இரண்டு முதல் மூன்று வருடங்கள் தேவைப்படும் என்பதால் என்னுடைய கமிட்மெண்ட்களை முடித்த பின்னர் அதை தொடங்க முடிவு செய்து இருக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
எனவே இனிவரும் நாட்களில் இந்த படத்தில் யார் யார்? நடிக்கப் போகிறார்கள் என்பது உறுதி செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.