Homeசெய்திகள்சினிமாகலகலப்பு 3 படத்தை கைவிடும் சுந்தர் சி... பிரம்மாண்ட படத்திற்கு திட்டம்...

கலகலப்பு 3 படத்தை கைவிடும் சுந்தர் சி… பிரம்மாண்ட படத்திற்கு திட்டம்…

-

அண்மையில் சுந்தர் சி இயக்கத்தில் அரண்மனை 4-ம் பாகம் திரையரங்குகளில் வெளியானது. இந்த ஆண்டில் முதல் பிளாக் பஸ்டர் திரைப்படமாக இது அமைந்தது. சுமார் 100 கோடி ரூபாய் வசூலை கடந்து இன்றும் வசூலை குவித்து வருகிறது. விமர்சன ரீதியாகவும் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. இத்திரைப்படத்தில் தமன்னா, ராஷி கண்ணா, சந்தோஷ்பிரதாப் மற்றும் யோகிபாபு உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்திருந்தனர்.

அரண்மனை படத்தின் வெற்றிக்கு பிறகு கலகலப்பு மூன்றாம் பாகத்தை சுந்தர் சி இயக்க இருப்பதாக தகவல் வெளியானது. இது தொடர்பாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு இதுவரை வெளியாக வில்லை. இருப்பினும், படத்தில் யார் யார் நடிக்கிறார்கள் என்பது தொடர்பான அப்டேட் அவ்வப்போது வந்து கொண்டிருக்கிறது. இந்த மாத இறுதியில் கலகலப்பு படத்தின் மூன்றாம் பாகத்தின் படப்பிடிப்பை தொடங்குவதாக கூறப்பட்டது.

இந்நிலையில், அரண்மனை 4-ம் பாகத்தின் வெற்றிக்கு பிறகு சிறிய பட்ஜெட் கையில் எடுப்பது தொடர்பாக சுந்தர் சி குழப்பத்தில் உள்ளாராம். பெரிய வெற்றிக்கு பிறகு சிறிய பட்ஜெட் படத்தை இயக்காமல், பிரம்மாண்ட படத்தை இயக்க அவர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால், கலகலப்பு மூன்றாம் பாகம் கிடப்பில் போடப்படுவதாகவும் கூறப்படுகிறது.

MUST READ