இயக்குனரும் நடிகருமான சுந்தர்.சி, கேங்கர்ஸ் பட ப்ரீ ரிலீஸ் விழாவில் பேசியுள்ளார்.தமிழ் சினிமாவில் சுந்தர்.சி ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவர் தற்போது கேங்கர்ஸ் எனும் திரைப்படத்தை தானே இயக்கி நடித்திருக்கிறார். காமெடி கலந்த கதைக்களத்தில் உருவாகி உள்ள இந்த படத்தில் வடிவேலுவும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். பல வருடங்களுக்குப் பிறகு இவர் மீண்டும் நகைச்சுவை நடிகராக களமிறங்கி இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. இந்த படத்தை அவ்னி சினிமாக்ஸ் நிறுவனம் தயாரிக்க சி. சத்யா இதற்கு இசையமைத்திருக்கிறார். இப்படம் வருகின்ற ஏப்ரல் 24ஆம் தேதி வெளியாக இருக்கிறது. இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 16) இந்த படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் சுந்தர். சி, வடிவேலு ஆகியோர் கலந்து கொண்டனர்.
#SundarC:
There are 3 Types of Directors in Tamil Cinema‼️
– First is who takes the film of what the DIRECTOR likes
– Second is who takes the film of what AUDIENCE likes
– Third is who takes the film of what HERO likesI’m the director who takes film for audience, that’s why I… pic.twitter.com/5a2eyxLT45
— AmuthaBharathi (@CinemaWithAB) April 17, 2025
அப்போது மேடையில் பேசிய சுந்தர்.சி, “தமிழ் சினிமாவில் மூன்று வகையான இயக்குனர்கள் இருக்கிறார்கள். முதலில் தனக்குப் பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். இரண்டாவது மக்களுக்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். மூன்றாவது ஹீரோவிற்கு பிடித்ததை எடுக்கும் இயக்குனர்கள். நான் அதில் இரண்டாவது வகை. மக்களுக்கு பிடித்ததை எடுக்கிறவன் நான். என்னை மாதிரி இயக்குனர்கள், தயாரிப்பாளர்களின் ஆதரவு இல்லாமல் வெற்றியை அடைய முடியாது” என்று தெரிவித்துள்ளார்.