Homeசெய்திகள்சினிமாசுந்தர். சி நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!

சுந்தர். சி நடிக்கும் ‘ஒன் 2 ஒன்’ படத்தின் முதல் பாடல் வெளியீடு!

-

- Advertisement -

பிரபல இயக்குனர் சுந்தர். சி நடிப்பதிலும் ஆர்வம் உடையவர். அந்த வகையில் இவர் பல படங்களில் கதாநாயகனாக மிரட்டி இருக்கிறார். அந்த வகையில் தற்போது கே திருஞானம் இயக்கியுள்ள ஒன் 2 ஒன் படத்தில் நடித்துள்ளார். சுந்தர். சி நடிக்கும் 'ஒன் 2 ஒன்' படத்தின் முதல் பாடல் வெளியீடு!இந்த படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து அனுராக் காஷ்யப், விஜய் வர்மன், நீது சந்திரா, ராகினி உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். இந்த படத்தை 24HRS புரொடக்ஷன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது. படத்திற்கு பூபதி கார்த்திக், பிரவீன் நித்தியானந்தம், விக்ரம் மோகன் ஆகியோர் இணைந்து ஒளிப்பதிவு செய்துள்ளனர். சித்தார்த் விபின் இதற்கு இசை அமைத்துள்ளார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்து தற்போது படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. இதற்கிடையில் படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டரை பட குழுவினர் வெளியிட்டிருந்தனர்.

அந்த போஸ்டரின் மூலம் சுந்தர் சிக்கு வில்லனாக அனுராக் காஷ்யப் நடித்திருப்பது தெரியவந்தது. இந்நிலையில் சிங்கம் சிறுத்தை எனும் முதல் பாடலை பட குழுவினர் வெளியிட்டுள்ளனர். விஜய் சேதுபதி, சுந்தர் சி ஆகியோர் இணைந்து இந்த பாடலை பாடியுள்ள நிலையில் மோகன் ராஜன் இப்பாடல் வரிகளை எழுதியுள்ளார். தற்போது இந்த பாடல் சமூக வலைதளங்களில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

MUST READ