Homeசெய்திகள்சினிமாசுந்தர் சி க்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்.... 'ஒன் 2 ஒன்' ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

சுந்தர் சி க்கு வில்லனாகும் அனுராக் காஷ்யப்…. ‘ஒன் 2 ஒன்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

-

- Advertisement -

சுந்தர் சி, அனுராக் காஷ்யப் நடிப்பில் உருவாகியுள்ள ஒன் 2 ஒன் படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இதில் சுந்தர் சி கதாநாயகனாக நடிக்க அனுராக் காஷ்யப் வில்லனாக நடித்துள்ளார். இந்த படத்தை இயக்குனர் கே திருஞானம் இயக்குகிறார். 24HRS ப்ரொடக்ஷன்ஸ் நிறுவனம் இதனை தயாரிக்கிறது. சித்தார்த் விபின் இதற்கு இசை அமைக்கிறார். இந்த படத்தின் படப்பிடிப்புகள் முழுவதும் நிறைவடைந்த நிலையில் இறுதி கட்ட பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்த ONLY I KNOW MYSELF போஸ்டரில் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
மேலும் படத்தின் டீசர் மற்றும் ட்ரெய்லர் குறித்த அப்டேட்டுகள் அடுத்தடுத்து வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே அனுராக் காஷ்யப் நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படத்தில் வில்லனாக மிரட்டி இருந்தார். இந்நிலையில் ஒன் 2 ஒன் படத்தில் வில்லனாக நடித்திருப்பது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகப்படுத்தி உள்ளது.

MUST READ