சுந்தர். சி நடிப்பில் உருவாகியுள்ள வல்லான் படத்தின் டீசர் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது.
தமிழ் சினிமாவில் சுந்தர். சி, ஒரு இயக்குனராகவும் நடிகராகவும் வலம் வருகிறார். அந்த வகையில் இவரது இயக்கத்தில் சமீபத்தில் மதகஜராஜா திரைப்படம் வெளியாகி வெற்றி நடை போட்டு வருகிறது. அடுத்தது இவர் கேங்கர்ஸ்,மூக்குத்தி அம்மன் 2, அரண்மனை 5 ஆகிய படங்களை கைவசம் வைத்து இருக்கிறார். இதற்கிடையில் இவர் ஒன் 2 ஒன் இன்னும் திரைப்படத்திலும் நடித்துள்ளார். மேலும் வல்லான் எனும் இன்வெஸ்டிகேஷன் திரில்லர் திரைப்படத்திலும் நடித்திருக்கிறார் சுந்தர். சி. இந்த படத்தில் சுந்தர்சியுடன் இணைந்து தான்யா ஹோப், கமல் காமராஜ், சாந்தினி தமிழரசன், தலைவாசல் விஜய் மற்றும் பலர் நடித்திருக்கின்றனர். டெல்லா ஃபிலிம் ஃபேக்டரி நிறுவனம் இந்த படத்தை தயாரிக்க வி. ஆர். மணி செய்யோன் இந்த படத்தை எழுதி இயக்கியிருக்கிறார்.
இந்த படத்திற்கு சந்தோஷ் தயாநிதி இசையமைக்க மணி பெருமாள் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தில் இருந்து அடுத்தடுத்த பாடல்களும் ட்ரெய்லரும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படக்குழு மீண்டும் ஒரு புதிய டீசரை வெளியிட்டுள்ளது. இந்த டீசர் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்று இணையத்தில் வைரலாகி வருகிறது. மேலும் இந்த படம் வருகின்ற ஜனவரி 24ஆம் தேதி தமிழகம் எங்கும் திரைக்கு வர இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.