Homeசெய்திகள்சினிமாசாய் பல்லவி சீதையாக நடிக்க லட்சணம் இல்லை... இந்தி நடிகர் பேச்சால் வெடித்த சர்ச்சை... சாய் பல்லவி சீதையாக நடிக்க லட்சணம் இல்லை… இந்தி நடிகர் பேச்சால் வெடித்த சர்ச்சை…
மலையாளத்தில் வெளியான பிரேமம் படத்தில் மலர் டீச்சர் வேடத்தில் நடிகை சாய் பல்லவி நடித்திருப்பார். இப்படத்தின் மூலமாகவே அவர் திரையுலகில் நாயகியாக அறிமுகமாகினார். முதல் படத்திலேயே தமிழ் ரசிகர்களையும் கவர்ந்த சாய் பல்லவி அடுத்து தமிழில் மாரி 2 படத்தில் நடித்தார். அடுத்து தியா, என்ஜிகே, பாவ கதைகள், கார்கி, படத்தில் நடித்திருந்தார்.
தமிழ் மட்டுமன்றி தெலுங்கிலும் அவர் ஆதிக்கம் செலுத்தி வருகிறார். அவரது நடிப்பில் வெளியான லவ்வர் மற்றும் பிடா ஆகிய படங்கள் அனைத்து மொழிகளிலும் பெரிய ஹிட் அடித்தன. நடிப்பு மற்றும் நடனத்தில் மிகவும் சிறந்து விளங்கும் சாய் பல்லவி ஸ்டார் நடிகர்களுக்கு இணையாக ரசிகர்களை கவர்ந்து வருகிறார். தற்போது கமல்ஹாசன் தயாரிப்பில் சிவகார்த்திகேயன் நடிக்கும் அமரன் படத்தில் நாயகியாக நடித்துள்ளார். மேலும், இந்தியில் ராமாயணம் கதையம்சம் கொண்ட படத்தில் ரன்பீர் கபூருடன் இணைந்து சாய் பல்லவி நடித்து வருகிறார்.
இந்நிலையில், சீதையாக நடிக்கும் சாய் பல்லவி முகத்தில் தேவதைக்குரிய லட்சணங்கள் இல்லை என்று இந்தி நடிகர் சுனில் லாஹ்ரி கூறியிருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. சாய்பல்லவி நடித்த படங்களை தான் இதுவரை பார்த்தது இல்லை என்றும், அவர் எப்படி நடிக்கப் போகிறார் என தெரியவில்லை என்றும் அவர் தெரிவித்தார். இது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கிறது. அதுமட்டுமன்றி அனிமல் போன்ற திரைப்படத்தில் நடித்த ரன்பீர் கபூர், ராமராக நடிப்பதை நினைத்துக்கூட பார்க்க முடியவில்லை என்றும் கூறியிருக்கிறார்